மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

0
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்தடுத்து பல புதிய திருப்பங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் சில ஸ்வாரசியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தொடர் பாரதி மற்றும் கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியா குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் அமிர்தா குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

அதாவது நீண்ட ஆண்டு கால பிரிவுக்கு பிற்பாடு பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க உள்ளனர். அதற்காக பாரதி தற்போது கண்ணம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். மறுபக்கத்தில் பாரதியும், கண்ணம்மாவும் தனியாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சுமியை சௌந்தர்யா தன்னுடன் இருக்கும் படி அழைத்து செல்கிறார். இப்போது கண்ணம்மா வீட்டுக்கு வரும் பாரதி தான் 6 நாட்களுக்கு மேல் அங்கு இருக்கப்போவதில்லை என பேசிக்கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போலவும், கண்ணம்மாவின் கர்ப்பத்தை பாரதி கொண்டாடுவது போலவும் சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் சமயத்தில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாவது போல அடுத்தகட்ட கதைக்களம் இருக்குமோ என்றும் சிலர் சந்தேகங்களை கிளப்பியுள்ளனர்.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

ஆனால் இந்த காட்சிகள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த எபிசோடுகளில் ஒளிபரப்பப்படும் கனவு காட்சிகள் என உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது பாரதி அவரை கவனித்து கொள்ளும் சில தருணங்கள் பாரதி அல்லது கண்ணம்மாவின் கனவாக வரலாம் என்றும் பழையவற்றை சௌந்தர்யா நினைத்து பார்ப்பது போலவும் இந்த காட்சிகள் அமைந்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!