விஜய் டிவியை விட்டு வேறு சேனலுக்கு தாவிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவியை விட்டு வேறு சேனலுக்கு தாவிய 'பாரதி கண்ணம்மா' பரினா - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவியை விட்டு வேறு சேனலுக்கு தாவிய 'பாரதி கண்ணம்மா' பரினா - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவியை விட்டு வேறு சேனலுக்கு தாவிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை பரீனா தற்போது அலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகை பரீனா:

கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொகுப்பாளராக பல முன்னனி சேனல்களிலும் பணியாற்றி வந்த பரீனாவிற்கு முன்னதாக மக்கள் மத்தியில் அடையாளம் இருந்தது. ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் வில்லி வெண்பாவாக நடிக்க தொடங்கியதும் தான் அதிக புகழும், பிரபலமும் கிடைத்தது. பரீனா இதற்கு முன்னதாக சன் டிவியிலும், கலர்ஸ் தமிழ் சேனலில் கூட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்துள்ளார். ஆனால் அந்த கதாபாத்திரங்கள் அந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே அறிந்திருப்பார்கள்.

அஸ்வின், ஷபானா இணையும் செம்பருத்தி சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்து வைத்துள்ளனர். வில்லி வேடத்தின் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணன் புகழை அடைந்தது போல் பரீனாவும் அதிக வெற்றியை பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் பிரசவ கால ஊசியில் சென்றிருக்கும் போது கூட கதையில் அவருக்காக பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. தற்போது அவர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ள போதிலும் முக்கிய காட்சிகள் ஏதும் வரவில்லை.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி, ராதிகா திருமணம்? அதிருப்தியில் ரசிகர்கள்!

இந்நிலையில், பரீனாவின் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா, தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் என்ற சீரியலில் நடிக்கிறார். இவர் கதாநாயகி ரேஷ்மாவின் தோழியாக வருகிறார். இவருடன் தொகுப்பாளர் பப்புவும் சேர்ந்து வரும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் இருந்து புது சேனலுக்கு சென்றுள்ள போதிலும், பாரதி கண்ணம்மா தொடரில் அவர் தொடருவரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!