“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா பிரசவத்திற்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ரசிகை ஒருவரின் கேள்விக்கு அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் கதைக்கு முக்கிய கதாபாத்திரமாக இருப்பது வில்லி வெண்பா தான். அவர் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில், தனது பிரசவத்திற்கு முன் வரை சீரியலில் நடித்து வந்தார். பின் இடைவெளி எடுத்துக் கொண்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் பெயர் சூட்டும் விழா நடத்தி ZYAN என பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
திடீர் திருமணம் செய்து கொண்ட “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – ரசிகர்கள் ஷாக்!
சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். குழந்தை பெற்று ஒரே மாதத்தில் அவர் இப்படி ஆக்டிவாக இருப்பது பலருக்கு முன் உதாரணமாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க ரசிகர் ஒருவர் பரீனாவின் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார். அதில் நீங்க எப்படி Postpartum Depression-ல இருந்து வெளியே வந்தீங்க நான் இதனால் மிகவும் கஷ்டப்பட்டேன் என கேட்டிருக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸ்வர்யா மீண்டும் ஜோடி சேரும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
அதற்கு பதில் சொன்ன பரீனா எனக்கும் Postpartum Depression இருந்தது. அதில் இருந்து வெளியே வர தான் நான் ஒரே மாதத்தில் வேலைக்கு வந்திருக்கிறேன். எனக்கும் டையர்ட் ஆகும், ஆனால் எனக்கு என் வேலை ஊக்குவிப்பதாக இருக்கும் நான் என் வேலையை என் ரசிகர்களுக்காக தொடர்ந்து செய்ய வேண்டும். அவர்களின் அன்பிற்கு பதிலாக நான் திருப்பி கொடுக்க வேண்டும் என தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்.