அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை – NO.1 சீரியலான “பாரதி கண்ணம்மா”!

0
அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை - NO.1 சீரியலான
அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை - NO.1 சீரியலான "பாரதி கண்ணம்மா"!
அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை – NO.1 சீரியலான “பாரதி கண்ணம்மா”!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் இந்த ஆண்டிற்கான 36வது வாரத்தில் TRPயில் முன்னிலையில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நகர் மற்றும் கிராம புறங்களிலும் இந்த சீரியல் முதலிடத்தில் இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பின்னர் இரண்டாவது சீசன் போல கதை சென்று கொண்டிருந்தாலும், முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்கான 36வது வாரத்திற்கான TRP ரேட்டிங்கில் இந்த சீரியல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், அதில் வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணமாகவில்லை என்ற உண்மையை அஞ்சலி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!!

அதனால் நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் நம்பர் 1 சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. தொடர்ந்து இந்த ஆண்டின் 36வது வாரத்திலும் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருக்கிறது. நகர் புறங்களில் சனிக்கிழமை எபிசோட் 13.1 TVR, திங்கள் அன்று 13.4 TVR , செவ்வாய் அன்று 13.5 TVR, புதன் கிழமை அதிகபட்சமாக 13.8 TVR, வியாழன் கிழமை 11.5 TVR வெள்ளிக்கிழமை 10.6 TVR என ரேட்டிங்ஸ் பதிவாகி வருகிறது.

பிரபல நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை – ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர். இன்னும் அனைத்து உண்மைகளும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த சீரியல் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கும் கண்ணம்மா ரோஷினி, பாரதி அருண், வெண்பா பரீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!