கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!!

0
கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!!
கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!!
கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!!

தமிழ் திரையுலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீ தானே எந்தன் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வித்யுலேகா ராமன். அவருக்கு தற்போது கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வித்யுலேகா ராமன்:

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நல்ல புகழ் பெற்ற நகைசுவை நடிகையாக இருப்பவர் வித்யுலேகா ராமன். அவரது தந்தை மோகன் ராமன் புகழ்பெற்ற குணசித்திர நடிகர் ஆவார். மேலும் இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ’ஜில்லா’,’தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’, ’வேதாளம்’,’காக்கி சட்டை’, ‘மாப்ள சிங்கம்’, ’புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை – ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!

இவர் சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது, இவர்களின் திருமண புகைப்படங்களை வெளியாகி உள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் களமிறங்கும் சன் டிவி கண்மணி சேகர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதில் மாப்பிள்ளையும் பெண்ணும் செம அழகாக போஸ் கொடுத்துள்ளனர். இத்திருமண விழாவில் செல்வராகவன் – கீதாஞ்சலி செல்வராகவன் என சொந்தங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் இருவரது உடைகளும் கண்ணை கவருவது போல இருந்தது. இவர் திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!