விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ஃபரினா – நம்பிக்கையின் நாயகி!

0
விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் 'பாரதி கண்ணம்மா' ஃபரினா - நம்பிக்கையின் நாயகி!
விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் 'பாரதி கண்ணம்மா' ஃபரினா - நம்பிக்கையின் நாயகி!
விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ஃபரினா – நம்பிக்கையின் நாயகி!

பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வரும் ஃபரினா தற்போது தனது இத்தனை வருட உழைப்பிற்கான வெற்றியை அனுபவித்து வருகிறார். அவரது கடின உழைப்பினால் தான் தற்போதைய இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது.

ஃபரினாவின் உழைப்பு:

எந்த துறையாக இருந்தாலும், அதற்கான விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் நமது வேலையை மட்டும் சரியாக செய்து வந்தால் அதற்கு வெற்றி நிச்சயம் பெரிய அளவில் தான் இருக்கும். அதற்கு தற்போது சரியான உதாரணமாக இருப்பவர் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லியாக வரும் ஃபரினா. இவர் முதன்முதலில் தனது வாய்ப்புகளில் பிரகாசிக்கவில்லை என்றாலும், தன்னை பார்வையாளர்கள் கவனிக்கும் படி, ஒரு தனித்தன்மையை கையாண்டு வந்தார். முதலில் தொகுப்பாளராக மட்டுமே தனது பணியினை தொடங்கினார்.

கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாரான பாரதி, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியல் ப்ரோமோ!

ஃபரினா வரும் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனியாக எதிர்பார்ப்புகள் கிளம்ப தொடங்கியது. இது ஒரு வகையான வெற்றி என்றாலும், இவரை கண்டாலே அனைவரும் திட்டும் அளவிற்கு தனது வில்லி கதாபாத்திரத்திற்கு நேர்மையாக நடித்து பெயர் வாங்கியது ஒரு வகையான வெற்றி. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை தவிர யாரும் சரியாக வரமாட்டார்கள் என்று இயக்குனர் நம்பும் அளவிற்க்கு தனது திறமையான நடிப்பின் மூலம் ஜொலிப்பவர். பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியான கண்ணம்மாவை கூட மாற்றுவதற்கு ஒத்துக் கொண்ட இயக்குனர், ஃபரினா தனது பிரசவத்தை காரணமாக கூறி சீரியலில் இருந்து விலகுவதாக கூறிய போது மறுத்து விட்டார். இதுவே இவர் வெண்பா கதாபாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தின் உதாரணம்.

‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைத்த வைல்ட் கார்டு என்ட்ரி சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

சீரியலில் அசால்ட்டாக கொலைகளை செய்யும் கொலைகாரியாக நடிப்பதனால் ரசிகர்களின் திட்டுகளை சலிக்காமல் வாங்கி கொண்டார். மேலும் தனது கர்ப்ப காலத்தில் வித்தியாசமான முறைகளில் போட்டோஷூட்களை நடத்தி வந்தார். பிரசவ நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று புகார்களை எழுப்பியவர்களின் விமர்சனங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இவர், பிரசவத்திற்கு பிறகு, தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்து பெண்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பல பெண்களின் நம்பிக்கையின் நாயகியாக மாறியுள்ளார் ஃபரினா. இவரது பல வருட கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here