‘அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி’ – Today Current Affairs 25 November

0
'அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி' - Today Current Affairs 25 November
'அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி' - Today Current Affairs 25 November

‘அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி’ – Today Current Affairs 25 November

3 வேளாண் சட்டங்களை திரும்பபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

  • விவசாயிகளுக்கான 3 வேளாண்மை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்ததை அடுத்து இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
  • நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பிற்கான முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

3 வேளாண் திட்டங்கள்:

  • விலை உத்திரவாதம்
  • வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம்
  • அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம்.

மதுரையில் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு:

  • மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில் மதுரையில் உள்ள புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர பரப்பில் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த செலவு:

  • கட்டிடம்- 99 கோடி
  • தொழில்நுட்ப சாதனங்கள்- 5 கோடி
  • புத்தகங்கள்- 10 கோடி

நிதி ஆயோக் திட்ட மதிப்பீட்டில் கோவை-க்கு இரண்டாம் இடம்:

  • நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி திட்டத்தில் 2021 ஆண்டுக்கான மதிப்பீட்டில் இந்தியா அளவில் கோவை 2-ஆவது இடத்தை பிடித்தது.ஜெர்மனியை சேர்ந்த வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த மதிப்பீடானது வெளியிடப்பட்டுள்ளது.
  • மதிப்பீடு அளவுகளில் 73.29 புள்ளிகள் எடுத்து கோவை 2ம் இடத்தில் உள்ளது. 75.50 மதிப்பெண்களுடன் சிம்லா முதல் இடத்தையும், 70 மதிப்பெண்களுடன் திருச்சி 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

கோவையின் மற்ற மதிப்பு விவரங்கள்:

  • வறுமை ஒழிப்பு- 87 புள்ளிகள் – முதலிடம்
  • உடல் நலம் பேணுதல்- 71 புள்ளிகள்- 5ஆவது இடம்
  • தரமான கல்வி- 88 புள்ளிகள்- 3ஆவது இடம்

க்ரிப்டோ கரன்சியை  அறிமுகம் செய்கிறது ஆர்.பி.ஐ :

  • தற்போது புழக்கத்தில் உள்ள தனியார் கரன்சியை தடை செய்ய புதிய மசோதா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதனடிப்படையில் புதிய க்ரிப்டோ கரன்சி தயாரிக்கும் வேலையே ஆர்.பி.ஐ செயல்படுத்துகிறது.
  • சோதனை ரீதியான டிஜிட்டல் கரன்சி விரைவில் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

க்ரிப்டோ கரன்சியின் பயன்கள்

  • அந்நிய செலாவணி மோசடியை தடுக்க உதவும்.
  • தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் உதவும்.

ஸ்வீடன் நாட்டில் முதல் பெண் பிரதமர் தேர்வு:

  • ஸ்வீடன் நாட்டின் முதன் பெண் பிரதமராக அந்நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மொத்தமுள்ள 349 இடங்களில் 175 வாக்குகள் எடுக்க வேண்டும் இதில் 174 பேர் மட்டுமே இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
  • பதவியேற்ற சிறிது நேரத்திலேயே இவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி:

  • ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி முதல் இடத்தில் உள்ளார்.
  • இதுவரை ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் 9,100 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 8,880 கோடி டாலர் மதிப்பில்  இரண்டாவது இடத்தில் உள்ளார்.
  • நேற்றைய பங்குச்சந்தை நிலவரப்படி ரிலையன்ஸ்72% சரிந்தது. அதேசமயம் அதானி என்டர்ப்ரைசஸ் 2.34% உயர்ந்ததால் இந்த பட்டியல் மாற்றம் நடந்துள்ளது.

காஷ்மீரை சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு சவ்ரிய சக்ரா விருது :

  • அண்மையில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வின் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு பொதுமக்களை காப்பாற்றி வீரமரணமடைந்த பிலால் அஹமத் மக்ரேவுக்கு வழங்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா பகுதியில் நடந்த சண்டையில் பிலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கான விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியா அரசியலமைப்பு தினம் நாளை கொண்டாடப்படுகிறது:

  • 1949 ஆம் ஆண்டு இந்தியா அரசியல் சாசனத்தை , அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. இதை நினைவு கூறும் வகையில் அரசியலமைப்பு தினம் 2015 முதல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நிகழ்ச்சி நாடாளுமற்றதில் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய துணைவேந்தர் பதவியேற்பு:

  • சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் பொறுப்பேற்றுள்ளார்.
  • நேற்று பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

  நகர்ப்புற ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை:

  • தமிழகத்தில் தக்காளி உட்பட பெரும்பாலான காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • இதனால் நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனை கருத்தில் கொண்டு இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
  • இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 8 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வீரர் வெற்றி:

  • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சத்ரியன் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
  • ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உக்ரைனின் யாரோஸ்லாவ் ஸ்முட்டேன் கோவை வீழ்த்தினார்.

விண்கல்லை திசை திருப்பும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நாசா:

  • பூமியை தாக்கக்கூடிய விண்களை செயலிழக்க செய்து அதன் சுற்றுப்பாதையை திசை மற்றும் நோக்கில் விண்ணில் ஏவப்படுள்ளது.
  • 2,500 விட்டம் கொண்ட டி டி மாஸ் என்ற விண்கல்லை பூமியில் இருந்து1 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போது அந்த செயற்கைகோள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த சோதனை எதிர்கால பாதிப்புகளில் இருந்து பூமியை தற்காத்துக்கொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!