கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாரான பாரதி, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியல் ப்ரோமோ!

0
கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாரான பாரதி, மகிழ்ச்சியில் சௌந்தர்யா - சீரியல் ப்ரோமோ!
கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாரான பாரதி, மகிழ்ச்சியில் சௌந்தர்யா - சீரியல் ப்ரோமோ!
கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ தயாரான பாரதி, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியல் ப்ரோமோ!

பாரதி கண்ணம்மா தொடரில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த கண்ணம்மாவும், பாரதியும் சேர்ந்து ஒரே வீட்டில் குழந்தைகளுடன் வாழும் காட்சிகளை இனி தொடரில் காணலாம். தற்போது நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு பாரதி மனம் மாறியுள்ளது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதியின் முடிவு:

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியின் பிரசவ நேரத்திலாவது வெண்பாவை பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்து விடும். இதனால் வெண்பாவை பற்றி பாரதி அறிந்து விலகி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி நடந்து விட்டால் கதையில் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதை போன்று இயக்குனர் புது திருப்பத்தை கொண்டு வந்துள்ளார். என்ன தான் கண்ணம்மாவின் மீது பல வருடங்களாக கோவத்தில் இருந்தாலும், பாரதி கண்ணம்மாவை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. இதனால் சௌந்தர்யா உட்பட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைத்த வைல்ட் கார்டு என்ட்ரி சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

ஆனால் நீதிபதி இருவரும் குறைந்தது ஆறு மாதங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் கண்ணம்மா உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பாரதி மட்டும் மிகுந்த வெறுப்படைந்துள்ளார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாரதியிடம் சௌந்தர்யா அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்த எபிசோடில் பாரதி அனைவரிடமும் வந்து நீதிமன்றம் கூறியது போல், நான் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்.

வயதான பாட்டி போல மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பாரதியின் இந்த முடிவினால் சௌந்தர்யா, வேணு, அகில் மற்றும் அஞ்சலி அனைவரும் சந்தோசப்படுகின்றனர். உடனே, சௌந்தர்யா இந்த வீட்ல கண்ணம்மா வந்து வாழ்றத நான் பார்க்கணும், அவ குரல் இந்த வீட்ல ஒலிக்கனும் என்று கூறுகிறார். ஆனால் பாரதி, நீங்க நினைக்குற மாதிரி எதுவும் நடக்காது. கண்ணம்மா இந்த வீட்டுக்கு வர வேணாம். நானே கண்ணம்மா வீட்டுக்கு போறேன் என்று கூறி விட்டு கிளம்புகிறார். எப்படியோ, பார்தி கண்ணம்மா கூட சேரப் போகிறான் என்று அனைவரும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பாரதியின் வருகைக்கு கண்ணம்மாவின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here