கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரலாகும் வீடியோ!

0
கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் 'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா - வைரலாகும் வீடியோ!
கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் 'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா - வைரலாகும் வீடியோ!
கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரலாகும் வீடியோ!

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகை பரினா தற்போது பிரசவம் முடித்து வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில், தனது குழந்தையை கேக் வெட்டி வரவேற்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ஒரு வில்லியாக மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவர் நடிகை பரினா. இத்தொடரில் வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் மோசமான வில்லியாக நடித்து வரும் பரினாவை சுற்றி தான் மொத்த கதையும் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா பிரிவதற்கும், இப்போது விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு சென்றிப்பதற்கும் காரணம் வில்லி வெண்பா தான்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன், தம்பிகளை பார்த்து ஆச்சர்யப்படும் கோதை – மெகா சங்கமம் ப்ரோமோ!

இப்படி பலரது திட்டுகளை வாங்கிக் கொண்டு மக்களை இன்னும் உற்சாகத்துடன் மகிழ்வித்து வரும் நடிகை பரினாவுக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியாக மக்களிடம் ஷேர் செய்திருந்த பரினா, தனக்கு சுகப்பிரசவம் நடந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது தவிர வெகு சீக்கிரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக வருவேன் என்றும் இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மகாசங்கமத்தில் கண்ணனுக்கு லீவு விட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

இப்படி இருக்க தற்போது பிரசவம் முடித்து வீட்டுக்கு வந்திருக்கும் நடிகை பரினா தனது குழந்தையை கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் வரவேற்றுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு பரினாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்போது நடிகை பரினா வீட்டில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!