சன் டிவி சீரியலில் இருந்து விலகிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – இனி இவருக்கு பதில் இவர்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியின் அப்பா வேணு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ரிஷி. அவர் தற்போது சன் டிவி தாலாட்டு சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நடிகர் ரிஷி:
தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு. இந்த தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் தான் நடிக்க வேண்டும் என எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் சில பிரபலங்கள் வெவ்வோறு தொலைக்காட்சிகளில் நடித்து அந்த சீரியல்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளனர். சீரியலில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மட்டும் பிரபலமாகாமல் கதைக்கு ஒன்றி நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் பிரபலமாக தான் இருக்கின்றனர்.
ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய “பிக்பாஸ்” பிரபலம் – வெளியான புகைப்படம்!
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சி ‘பாரதி கண்ணம்மா’ என்ற ஹிட் சீரியலில் ஹீரோவின் அப்பாவாக நடிப்பவர் நடிகர் ரிஷி. அவர் அந்த சீரியல் மட்டுமல்லாமல் சன் டிவி தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். பல வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை வருகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகின்ற தொடர் தான் தாலாட்டு. இந்த சீரியலில் ஸ்ருதி ராஜ், கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
வெண்பாவை சீண்டும் கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி குடும்பத்தினர் – வெளியான ப்ரோமோ!!
ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை எடுத்துரைக்கும் கதைக்கருவாக தாலாட்டு அமைந்துள்ளது. தற்போது தாலாட்டு சீரியலில் இருந்து ரிஷி வெளியேறி உள்ளார். இது குறித்து தகவல் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் ஏன் இவர் சீரியலை விட்டு வெளியேறினார் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. அவருக்கு பதிலாக இன்னொரு பிரபல நடிகர் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ரிஷி சின்னத்திரை மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.