ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய “பிக்பாஸ்” பிரபலம் – வெளியான புகைப்படம்!

0
ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய
ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய "பிக்பாஸ்" பிரபலம் - வெளியான புகைப்படம்!
ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய “பிக்பாஸ்” பிரபலம் – வெளியான புகைப்படம்!

விஜய் டிவி பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக புது கார் வாங்கி அந்த போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் தாடி பாலாஜி புதிய பி.எம்.டபுள்யூ கார் வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் தாடி பாலாஜி:

விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி லெஜண்டுகளுடன் ஏகப்பட்ட படங்களில் துணை காமெடியனாக நடித்து அசத்தியவர் தாடி பாலாஜி. தளபதி விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும், சச்சின் உள்ளிட்ட பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாடி பாலாஜி விஜய் டிவியின் மாயாவி மாரிச்சான் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் தாடி பாலாஜி கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

வெண்பாவை சீண்டும் கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி குடும்பத்தினர் – வெளியான ப்ரோமோ!!

அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து முதல் மனைவியை பிரிந்த தாடி பாலாஜி இரண்டாவதாக நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். அதன் பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பின் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட அவர் மீது நடிகை ஐஸ்வர்யா குப்பைகளை கொட்டினார். அப்போதும் அவரின் பொறுமையான குணம் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பின்னர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.

சந்தியா பையில் இருந்து விழுந்த விவாகரத்து பத்திரம், மோதிரம் மாற்றிக் கொண்ட திருமண ஜோடிகள் – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் அவர் தற்போது BMW கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காருக்கு முன்னால் நின்றபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை ஷிவானி நாராயணன் BMW கார் வாங்கிய புகைப்படங்களை பதிவிட்டார். மேலும் தேன்மொழி BA சீரியல் நடிகை ஜாக்குலின் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்குவது தற்போது சீசனாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!