வங்கிகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறை – முக்கிய தகவல் வெளியீடு!

0
வங்கிகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறை - முக்கிய தகவல் வெளியீடு!
வங்கிகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறை - முக்கிய தகவல் வெளியீடு!
வங்கிகளுக்கு இந்த வாரத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறை – முக்கிய தகவல் வெளியீடு!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த வாரத்தில் மட்டும் ரக்ஷா பந்தன், தேசபக்தர் தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்கள் வருவதால் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பொதுவாக பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடுவதுண்டு. அதாவது, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை.

Exams Daily Mobile App Download

அதாவது, எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தில் ரக்ஷா பந்தன், தேசபக்தர் தினம் மற்றும் வார இறுதி நாள் என ஆகஸ்ட் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய 5 நாட்கள் விடுமுறை வருகிறது. ஆனால், வங்கி விடுமுறை தினங்களில் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் மற்றும் ATM சேவைகள் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? நிதித்துறை இணை அமைச்சர் பதில்!

தற்போது ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்துள்ள விடுமுறை நாட்களை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 1: Drukpa Tshe-zi காரணமாக காங்டாக் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 8: முஹர்ரம் (அஷூரா) பண்டிகை காரணமாக ஜம்மு, ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 9: முஹர்ரம் (ஆஷூரா) பண்டிகை காரணமாக அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் காரணமாக அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் காரணமாக கான்பூர் மற்றும் லக்னோ வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் காரணமாக இம்பால் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) தினம் காரணமாக பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8), கிருஷ்ண ஜெயந்தி தினம் காரணமாக அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா), கணேஷ் சதுர்த்தி, வரசித்தி விநாயக விரதம், விநாயகர் சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் வார இறுதி நாட்களை பார்க்கலாம்,

ஆகஸ்ட் 7: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 14: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 21: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 28: ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!