விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு - அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு - அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கதையில் கொண்டு வரும் நோக்கில் கதைக்களம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதற்கு ஒரு சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. படிக்காத பெண்ணாக இருக்கும் பாக்கியா தன்னுடைய கணவராலும், குழந்தைகளாலும் மட்டம் தட்டப்படுகிறார். அதில் இருந்து அவருக்கு தெரிந்த விஷயங்களை சிறப்பாக செய்து முன்னுக்கு வருகிறார். வெறும் பாக்கியாவின் குடும்பத்தை மட்டும் சீரியல் கதையாக கொண்டு செல்லாமல் வங்கி பண மோசடியில் பாக்கியா சிக்குவது போலவும், அதில் இருந்து மீண்டு வருவது போல பல கதைக்களம் அமைக்கப்பட்டது.

Vijay TV Bigg Boss 5 Promo | தாமரையுடன் இனிமேல் பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா!

அதை தொடர்ந்து சீரியலில் பாக்கியாவின் இளைய மகன் எழில் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை சிறு வயதில் இழந்த அமிர்தாவை திருமணம் செய்ய விருப்பப்படுவது போல காட்டப்படுகிறது. அதுவும் விதவை மறுமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல இருக்கிறது. தற்போது அடுத்தபடியாக சென்று கோவையில் பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பலரிடம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா – வைரலாகும் வீடியோ!

தற்போது பாக்கியலட்சுமி குழு அந்த சம்பவத்தை கதையில் கொண்டு வந்துள்ளது. அதில் இனியா தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு மாணவிகள் அதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் இருக்கின்றனர். அதை பாக்கியா எப்படி கையாண்டு நீதி வாங்கி கொடுக்க இருக்கிறார் என்பதே கதையாக இருக்க போகிறது. ஆனால் ஒரு சிலர் இது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயம் இதை இப்படி சீரியலில் கொண்டு வருவது அருவருப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சீரியல் மூலமாக மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு வர வேண்டும். மாணவிகள் இப்படி பிரச்சனை இருந்தால் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்வதால் இது நல்ல விஷயம் தான் என ஒரு தரப்பில் சொல்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!