திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா – வைரலாகும் வீடியோ!

0
திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா - வைரலாகும் வீடியோ!
திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா - வைரலாகும் வீடியோ!
திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை நக்ஷத்ரா தனது திருமணத்திற்கு பிறகு கணவருடன் கலந்து கொண்ட மறுவீட்டு விருந்து நிகழ்வுகளை ஒரு வீடியோவாக வெளியிட அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நக்ஷத்ரா

தமிழ் சின்னத்திரையில் ஒரு விஜேவாக அறிமுகமாகி தற்போது சீரியல்கள் மூலம் ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் தன்னை நிரூபித்திருப்பவர் நடிகை நக்ஷத்ரா. சில டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சன் டிவியின் சீரியல்கள் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்திருந்த அனுபவத்தை வைத்து சீரியல்களில் நடிக்க துவங்கிய நக்ஷத்ராவுக்கு மக்கள் ஏகப்பட்ட வரவேற்புகளை கொடுத்து வந்தனர்.

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து சில சீரியல்களில் தலை காட்டி வந்த நடிகை நக்ஷத்ரா தற்போது விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் சரஸ்வதியாக நடித்து மக்களின் அன்பையும், ஆதரவையும் சம்பாதித்திருக்கிறார். இதற்கிடையில் நடிகை நக்ஷத்ரா தனது நீண்ட நாள் காதலரும் நண்பருமான ராகவ் என்பவரை கடந்த மாதத்தில் கரம் பிடித்தார். இவர்களது இந்த திருமணம் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!

அதே போல நடிகை நக்ஷத்ரா மற்றும் ராகவின் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்கள் கூட மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இப்போது தனது திருமண வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடி வரும் நடிகை நக்ஷத்ரா, திருமண சடங்குகளில் முக்கியமான ஒன்றான மறு வீட்டு விருந்துக்கு சென்றுள்ளார். இந்த விருந்தில் தனது உறவினர்களுடன் நக்ஷத்ரா மற்றும் ராகவ் இருவரும் ஆடிப்பாடி கொண்டாடி, விருந்து உண்ட வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!