
“பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட்ட பாக்கியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இன்னும் விவாகரத்து பத்திரம் பற்றி பேசாமல் இருக்க அதில் பாக்கியா கையெழுத்து போடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி பாக்கியாவை பிரிய முடிவு செய்து இருக்கிறார். அதற்காக ராதிகா வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்ய, அவர் இருவரும் விருப்பப்படி பிரிந்து சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார். உடனே கோபி என் மனைவி அதற்கு சம்மதம் தான் சொல்வார் என சொல்ல அப்போ இந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வாருங்கள் என சொல்கிறார். கோபி அந்த பத்திரத்தை பற்றி இன்னும் பாக்கியாவிடம் பேசாமல் இருக்கிறார்.
ராதிகாவுடன் திருமணம், பாக்கியாவை திட்டி தீர்க்கும் கோபி – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
மறுபக்கம் பாக்கியா கோபியின் தந்தைக்காக ஓடி ஓடி வேலை செய்கிறார். மருத்துவ செலவுகள் முதல் அவருக்கு இயற்கை உபாதைகள் கழிப்பது வரை எல்லாமே பாக்கியாவே செய்கிறார். இந்நிலையில் ராதிகா அடிக்கடி போன் செய்து கோபியிடம் கையெழுத்து பற்றி கேட்கிறார். இந்நிலையில் பாக்கியாவிடம் கோபி கையெழுத்து வாங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
அதில் மீண்டும் ராதிகா போன் செய்து கோபியிடம் விவாகரத்து பற்றி கேட்கிறார். அப்போது கோபி என்ன செய்வது என தெரியாமல் பத்திரத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது பாக்கியா வர இது என்ன நோட்டீஸ் என கேட்கிறார். கோபி இதில் உன்னுடைய கையெழுத்து வேண்டும் என சொல்ல, கோபி என்ன படிக்காமல் கையெழுத்து போடுகிறாய் என கேட்கிறார். அப்போது பாக்கியா நீங்க சொன்னால் சரியாக தான் இருக்கும் என சொல்கிறார். அதனால் அடுத்து ராதிகா கோபி திருமணம் நடைபெற இருக்கிறது.