கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடை திறப்பு விழாவுக்காக ஆயத்தமாகி வரும் கதிருக்கு, முல்லை தன் கையால் ஒரு சட்டை தைத்து கொடுத்து அவரை அசத்துவது போல வெளியான ப்ரோமோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக கடையை மீட்டுள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் தற்போது புதிய கடையில் திறப்பு விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. இதுவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், கடந்த 2 வாரங்களாக புதிய கடைக்கு ஏற்பட்ட பிரச்சனையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு போரடித்து வந்தது. ஆனால், கடையை மீட்பதற்காக மூர்த்தி குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் எபிசோடுகள் மீண்டுமாக கவனம் ஈர்க்க துவங்கியது. இப்போது மீட்கப்பட்ட புதிய கடையை திறப்பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் அணிந்து கொள்வதற்காக குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பிளவுஸ் தைத்து கொடுத்து அசத்துகிறார் முல்லை. இது தொடர்பான எபிசோடுகள் இதுவரை வெளியாகி இருக்கும் நிலையில், கதிர் – முல்லை ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிளவுஸ் தைத்து கொடுக்கும் முல்லை, கதிருக்கும் தன் கையால் ஒரு சட்டை தைத்து கொடுக்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த சட்டையை வாங்கி பார்க்கும் கதிர், சட்டை வாங்கியதா என்று கேட்க, இல்லை நானே தைத்தது என்று முல்லை கூறுகிறார். அதை வாங்கி போட்டு பார்க்கும் கதிர் அப்படியே அளவெடுத்து தைத்ததாக சொல்கிறார். பிறகு கடை திறப்பு விழாவுக்கு இந்த சட்டையை தான் போடப்போவதாக கதிர் சொல்ல, இல்லை வேறு ஏதாவது நல்ல சட்டை இருந்தால் போடுங்கள் என்று முல்லை கூறுகிறார். ஆனால் இது என் பொண்டாட்டி ஆசையாக தைத்து கொடுத்த சட்டை. இதை தான் நான் நாளைக்கு போடுவேன் என்று கதிர் கூறுவது போல வெளியான ரொமான்டிக் ப்ரோமோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here