பாக்கியாவை வீட்டிற்கு அழைத்த ராதிகா, மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை வீட்டிற்கு அழைத்த ராதிகா, மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி -
பாக்கியாவை வீட்டிற்கு அழைத்த ராதிகா, மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி - "பாக்கியலட்சுமி" சீரியல் இன்றைய எபிசோட்!
பாக்கியாவை வீட்டிற்கு அழைத்த ராதிகா, மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா பாக்கியா செய்த சாதனையை பாராட்ட அவருடைய அலுவலகத்திற்கு வருகிறார். பின் பாக்கியாவை குடும்பத்துடன் ராதிகா வீட்டிற்கு வர சொல்லி சொல்கிறார். பின் கோபியிடம் அது பற்றி சொல்ல கோபியால் எப்படி இருவரையும் சமாளிப்பது என தெரியாமல் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை செய்கிறார். அதனால் சந்தோசப்பட்ட ராதிகா பாக்கியாவை பார்க்க வருகிறார். நீங்க சாதனை செய்ததை நினைத்து எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக ராதிகா சொல்கிறார். பின் பாக்கியாவை தன்னுடைய வீட்டிற்கு சாப்பிட வர வேண்டும் என ராதிகா அழைக்கிறார். நீங்க மட்டும் இல்லை இனியா எழில் செழியன் ஜெனி என அனைவரும் வர வேண்டும். உங்க கணவரையும் வர சொல்லுங்கள் என சொல்கிறார்.

சித்ராவின் மரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய ஹேம்நாத் – வைரலாகும் வீடியோ!

ஆனால் பாக்கியா என்னுடைய கணவர் வரமாட்டார் நாங்க எல்லாரும் கண்டிப்பாக வருகிறோம் என சொல்கிறார். ஏன் உங்க கணவரை நான் பார்த்ததே இல்லை என சொல்ல அப்போது செல்வி சாருக்கு அக்காவை பிடிக்கவில்லை என சொல்கிறார். அக்கா எங்கே கூப்பிட்டாலும் அவர் வரமாட்டார் என சொல்கிறார். பின் பாக்கியா அப்படி எல்லாம் இல்லை. அவருக்கு கூச்ச சுபாவம் இருக்கிறது என சொல்கிறார். பின் ராதிகா கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும் என சொல்லிவிட்டு வருகிறார்.

பின் ராதிகா வீட்டில் கோபி இருக்க ராதிகா பாக்கியாவை பார்த்ததை சொல்கிறார். அப்போது கோபியிடம் பாக்கியாவை வீட்டிற்கு அழைத்தேன். ஆனால் அவருடைய கணவர் வரமாட்டேன் என சொன்னதாக சொல்கிறார். ஏன் என கேட்க அவருக்கு டீச்சரை பிடிக்காதாம் என சொல்கிறார். கோபி இவங்க பாசத்திற்கு நடுவே நான் எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியாமல் இருக்கிறார். பின் வீட்டில் பாக்கியா கோபியிடம் பேச என்னால் முடியாது என சொன்னீங்க ஆனால் இப்போது நான் எல்லாம் செய்து விட்டேன் என சொல்கிறார்.

கோபி ஆமாம் உன்னால் எல்லாம் செய்ய முடியும் கலெக்டர் கூட ஆக முடியும் என சொல்ல அப்போது பாக்கியா ஆமாம் என்னால் முடியும் என சொல்கிறார். பின் பாக்கியாவிடம் கோபி நான் எங்கேயும் கூட்டிட்டு போகாததை எல்லாரிடமும் சொல்கிறாயா என கேட்க அப்போது பாக்கியா நான் யாரிடம் சொன்னேன் என கேட்கிறார். அப்போது பாக்கியா நான் ராதிகாவிடம் தான் அப்படி பேசினேன் என சொல்ல அப்போ பேசுகிறாய் என கேட்கிறார். பின் கோபிக்கு இரவு போன் வருகிறது. அப்போது பாக்கியாவிற்கு சந்தேகம் வர கோபி போனை எடுத்துக் கொண்டு சென்று பேசுகிறார். ஒரு வாரமாக ஏன் என்னிடம் பேசவில்லை என ராதிகா கோவமாக போனை வைக்கிறார். பின் பாக்கியா தூங்குவது போல நடிக்க கோபி வந்து படுத்துவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

மறுநாள் காலையில் பாக்கியா தினமும் அப்பாவிற்கு போன் வருவதாக சொல்ல எழில் அப்பாவின் பெண் தோழியாக இருக்கும் என சொல்கிறார். ஆனால் பாக்கியா எழில் சொன்னதை நம்பாமல் இருக்கிறார். பின் தாத்தாவின் பிறந்தநாளுக்கு கோவிலுக்கு போவோமா என சொல்ல ஈஸ்வரி வீட்டிலேயே அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவோம் என சொல்கிறார். பாக்கியா இது நல்ல ஐடியா தான் என சொல்கிறார். அவருக்கு பிடித்த சொந்தங்களை வர சொல்லி பண்ணலாம் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அவங்க பிறந்தநாளுக்கு தெரியாமல் சப்ரைஸாக வர வேண்டும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here