கோபி & ராதிகா பிரச்சனையால் எழிலை கேவலமாக பேசும் ஜெனியின் அம்மா – விறுவிறுப்பான கட்டங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

0
கோபி & ராதிகா பிரச்சனையால் எழிலை கேவலமாக பேசும் ஜெனியின் அம்மா - விறுவிறுப்பான கட்டங்களுடன் 'பாக்கியலட்சுமி'!
கோபி & ராதிகா பிரச்சனையால் எழிலை கேவலமாக பேசும் ஜெனியின் அம்மா - விறுவிறுப்பான கட்டங்களுடன் 'பாக்கியலட்சுமி'!
கோபி & ராதிகா பிரச்சனையால் எழிலை கேவலமாக பேசும் ஜெனியின் அம்மா – விறுவிறுப்பான கட்டங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தது போலவே இந்தத் தொடரில் கோபியின் திருட்டு தனம் வெளிப்பட்டு, தற்போது அவருக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்தும் நடந்துள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களை கவர்ந்து வருவது போலவே, அதன் தொடர்களும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஒரு தொடர் சிறப்பான வரவேற்பை பெற்றால் அடுத்தடுத்த சீசன்களை வெளியிடுவதும், வரவேற்பை பெறவில்லை என்றால் அதை முடித்து வைப்பது என்று அதிரடிகளை சேனல் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கோபி கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்பு பாக்கியா வீட்டை விட்டு வெளியே சென்றார். மொத்த குடும்பமும் கோபியை திட்டி தீர்த்தனர்.

விரைவில் முடிவடையும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வைரலாகும் தகவல்!

இதையடுத்து கோபி-பாக்கியாவிற்கு சட்ட ரீதியாக விவாகரத்து கிடைத்துவிடுகிறது. மேலும் கோபி வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் ஈஸ்வரி, செழியன், இனியா ஆகியோர் பாக்கியா மீது கோபமாக இருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியா, கோபி விவாகரத்து செய்தி அனைவருக்கும் தெரிந்து விட்டது, இதை பற்றியே ஊர் முழுவதும் பேசி வருகின்றனர். இதையடுத்து தற்போது ஜெனியின் அம்மாவுக்கு இந்த செய்தி தெரிந்துவிட்டது. இதனால் நேராக பாக்கியாவின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அம்மா எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறார். அப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் செழியன் தலைகுனிந்து நிற்கிறார்.

அதன்பின்பு ஜெனி தனது அம்மாவை ரூமுக்கு அழைத்து செல்கிறார். மேலும் செழியன் இந்த அவமானம் எனக்குத் தேவையா என பாக்கியாவை கண்டபடி திட்டி செல்கிறார். இதையடுத்து ஜெனி தனது அம்மாவை சமாதானப்படுத்த முற்படுகிறார். எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீ வந்து கேட்கலாம். நான் இங்க சந்தோஷமா தான் இருக்கேன். நீ ஆன்ட்டி விஷயத்துல தலையிடாத என ஜெனி தனது அம்மாவிடம் கூறுகிறார். ஆனால் நான் என் பொண்ண இந்த வீட்ல கொடுத்திருக்கேன். வெளியில் கேள்வி கேட்டா நானும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இப்ப எதுக்கு டைவர்ஸ் அப்படி என்ன சண்டை என ஜெனியின் அம்மா கேள்வி கேட்கிறார். ஆனால் ஜெனி எதுவும் சொல்ல முடியாமல் ஒரு வழியாக சமாளிக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here