பாக்கியலட்சுமி தொடரின் முன்னாள் ராதிகாவான ஜெனிபரின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!

0
பாக்கியலட்சுமி தொடரின் முன்னாள் ராதிகாவான ஜெனிபரின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி தொடரின் முன்னாள் ராதிகாவான ஜெனிபரின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி தொடரின் முன்னாள் ராதிகாவான ஜெனிபரின் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் தனது மகனின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஜெனிபர். ஜெனிபர் கர்ப்பமாக இருந்ததன் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். ஆரம்பத்தில் ஜெனிபர் தான் ராதிகா கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என ரசிகர்கள் கூறிவந்தனர். பின்பு, ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு அறிமுகமானார்.

ராதிகாவின் அம்மாவிடம் மாட்டிக்கொள்ள போகும் கோபி – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

ஆரம்பத்தில் ராதிகா கதாபாத்திரத்திற்கு ரேஷ்மாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாளடைவில், ரேஷ்மாவும் அந்த கதாபாத்திரத்திற்கு ஒருங்கிணைந்துவிட்டார். ஜெனிபருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் ரசிகர்களுக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை தெரியப்படுத்தினார். ரசிகர்களும் ஜெனிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவ்வப்போது தனது மகனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருந்தார்.

Exams Daily Mobile App Download

தற்போது ஜெனிபர் தனது கணவரின் பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது தனது இரண்டு மகன்கள், கணவர் என குடும்பமாக ஒரு புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இரண்டாவது மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!