WhatsApp செயலியை உபயோகிப்பவரா நீங்கள் – செய்திகளை எப்படி ஃபேக் அப் செய்வது? முழு விவரம் இதோ!

0
WhatsApp செயலியை உபயோகிப்பவரா நீங்கள் - செய்திகளை எப்படி ஃபேக் அப் செய்வது? முழு விவரம் இதோ!
WhatsApp செயலியை உபயோகிப்பவரா நீங்கள் – செய்திகளை எப்படி ஃபேக் அப் செய்வது? முழு விவரம் இதோ!

பயனர் ஒருவர் மொபைல் சாதனங்கள் அல்லது ஃபோன் எண்களை மாற்றும்போது நீக்கப்படும் சேட்களை மீண்டும் புதிய சாதனத்தில் பெற்றுகொள்ள வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

ஃபேக் அப் அம்சம்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியாக திகழும் வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து உலகத்தின் எந்தவொரு மூலையில் வசிப்பவர்களையும் சேட், குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு மூலமாக எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அந்த வகையில் வாட்ஸ்அப்பின் இப்படிப்பட்ட அம்சங்கள் தொலை தூரத்தில் இருக்கும் தங்களுக்கு அருமையானவர்கள் அருகில் இருப்பது போல உணரவைக்கிறது. இதனுடன் வாட்ஸ்அப் பயனர் இப்போது செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும்.

அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இதனால் வாட்ஸ்அப் செயலி மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இருக்கிறது. இது தவிர இந்த வாட்ஸ்அப் செயலி பலவிதமான சிறப்பு அம்சங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதாவது, உலகளவில் தொழில்நுட்ப சேவைகள் வளர்ந்து வரும் போது அதற்கேற்றவாறு வாடிக்கையாளர்களை மாற்றிக்கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதுப்பிப்புகளுடன் வருகிறது. இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் அதிகம் தேடும் ஒரு முக்கியமான அம்சம் எதுவென்று பார்த்தால் அது பேக்அப் ஆப்ஷன் தான்.

ஏனென்றால் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் சாதனங்கள் அல்லது ஃபோன் எண்களை மாற்றும்போது, வாட்ஸ்அப்பில் உள்ள சேட்களை புதிய சாதனத்தில் மீட்டெடுக்க உதவி செய்கிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் அரட்டைகளை எப்படி காப்புப் பிரதி (Backups) எடுப்பது மற்றும் உங்கள் தரவை எவ்வாறு சேமிப்பது உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

  • முதலில் WhatsApp பயன்பாட்டைத் திறக்கவும்
  • உங்கள் திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் விருப்பத்தைத் தட்டவும்
  • அங்கு Settings என்பதில் கிளிக் செய்யவும்.
  • பிறகு அரட்டைகளைத் தட்டவும்.
  • தொடர்ந்து ஃபேக் அப் செய்ய வேண்டிய அரட்டை காப்பு விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • உங்கள் WhatsApp காப்பு அமைப்புகளை உள்ளமைக்கவும்.
  • தற்போது கூகுள் டிரைவ் மூலம் வாட்ஸ்அப் கோப்புகளை மட்டுமே காப்புப் பிரதி எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!