தனது தம்பியை மடியில் வைத்து போஸ் கொடுத்த ஐலா பாப்பா – அம்மா ஆலியா வெளியிட்ட புகைப்படம்!

0
தனது தம்பியை மடியில் வைத்து போஸ் கொடுத்த ஐலா பாப்பா - அம்மா ஆலியா வெளியிட்ட புகைப்படம்!
தனது தம்பியை மடியில் வைத்து போஸ் கொடுத்த ஐலா பாப்பா - அம்மா ஆலியா வெளியிட்ட புகைப்படம்!
தனது தம்பியை மடியில் வைத்து போஸ் கொடுத்த ஐலா பாப்பா – அம்மா ஆலியா வெளியிட்ட புகைப்படம்!

சின்னத்திரை நடிகர்களான ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஐலா தனது தம்பியை மடியில் வைத்திருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா:

தமிழில் குளிர் 100 டிகிரி படம் மூலமாக மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் நடிகர் சஞ்சீவ். அதன் பின் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடிகராக களமிறங்கினார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். அவர் ஒரு நடன நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு வந்தவர். இந்நிலையில் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலமாக இருவருக்கும் காதல் வர சஞ்சீவ் வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அதன் பின் இருவரின் காதலுக்கு அடையாளமாக ஐலா என்ற குழந்தை பிறந்தது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

சஞ்சீவ் ஆலியாவை விட ஐலா பாப்பா பிறந்தது முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார். சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் சீரியலிலும், ஆலியா விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வந்தார். அப்போது ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். தன்னுடைய 9 மாதம் வரை ஆலியா சீரியல் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். அதன் பின் சீரியலில் இருந்து விலகிய அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

Exams Daily Mobile App Download

தனது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்த தம்பதி, இன்னும் குழந்தையின் முகத்தை காட்டாமல் இருக்கின்றனர். இந்நிலையில் ஐலா தனது தம்பியை கொஞ்சும் வீடியோக்கள் பல ஆலியா சஞ்சீவ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது தம்பியை மடியில் வைக்க சொல்லி அப்பாவிடம் சொல்ல சஞ்சீவ் பாப்பாவை மடியில் வைப்பது போல அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!