பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய கோபி, சரியான நேரத்தில் பணத்துடன் வந்த எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய கோபி, சரியான நேரத்தில் பணத்துடன் வந்த எழில் - இன்றைய
பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய கோபி, சரியான நேரத்தில் பணத்துடன் வந்த எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய கோபி, சரியான நேரத்தில் பணத்துடன் வந்த எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பணத்தை எடுக்க பாக்கியா கோபியின் தந்தையுடன் வர இந்த பேங்கில் பணம் எடுக்க முடியாது என வங்கி ஊழியர் சொல்கிறார். கடைசி நேரத்தில் பணம் இல்லாமல் கோபி பாக்கியாவை வெளியே தள்ள, எழில் சரியான நேரத்தில் வருகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியின் அப்பாவிடம் பேங்க் வருகிறார். அங்கே இவ்வளவு பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்க சொந்த ஊருக்கு தான் போக வேண்டும் என சொல்கின்றனர். பின் பேங்க் மேனேஜரிடம் பேச அவரும் அதே தான் சொல்கிறார். உடனே கோபியின் தந்தை நான் ஒரு நாள் நேரம் கேட்டு சொந்த ஊருக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என சொல்கிறார். உடனே பாக்கியா என்னால் தான் எல்லாருக்கும் கஷ்டம் என கேட்டு வருத்தப்படுகிறார்.

பின் கோபி ஆபிஸ் கிளம்ப பணம் கேட்டு அவரிடம் சத்தம் போடுகின்றனர். பின் கோபி என்னிடம் பணம் கொடுக்கவில்லையே யாரிடம் கொடுத்தார்களோ அவர்களிடம் கேளுங்க என கோபி சொல்ல, இது என்னுடைய வீடு வீட்டை விட்டு வெளியே போங்க என கோபி சொல்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து எங்களை ஏமாற்றிவிட்டு பணம் வாங்காமல் நாங்க போக மாட்டோம் என சொல்ல, கோபி என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.

எதிர் வீட்டில் வந்ததை நினைத்து சந்தோசப்படும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அந்த நேரம் பார்த்து ஆட்டோவில் பாக்கியா வர செல்வி இதோ அக்கா வந்துட்டாங்க, பணத்தை எடுத்து கொடுங்க என செல்வி சொல்கிறார். இத்தனை வருஷம் பழகுகிறோம் யார் என்ன என்று தெரியாமல் என்னென்னமோ பேசுகிறார்கள் என செல்வி சொல்ல, கோபியின் தந்தை எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும் என சொல்கிறார். என் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கமுடியவில்லை என சொல்ல, ஈஸ்வரி தற்போது நிம்மதி அடைகிறார்.

ஒரு நாள் நேரம் கொடுத்தால் நான் ஊருக்கு சென்று எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன் என கோபியின் தந்தை சொல்கிறார். ஆனால் அக்கம் பக்கத்தினர் நீங்க குடும்பத்துடன் ஏமாற்ற இருப்பதாக சொல்லி சண்டை போடுகின்றனர். இப்படி தான் எழில் தம்பி சொன்னார் ஆனால் அவரை இன்னும் காணவில்லை. அது போல இவரும் கிளம்பி சென்றுவிடுவார்கள் என சொல்கிறார். வீட்டிற்குள் இனியா அழுக தொடங்க, செல்வி ஜெனியை எழிலிற்கு போன் செய்து பார்க்கிறார்.

ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

ஆனால் நம்பர் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். வீட்டு வாசலில் அனைவரும் சண்டைபோட, கோபி என்ன செய்வது என தெரியாமல் பாக்கியாவை அழைக்கிறார். பாரு நம்ம பொண்ணு எப்படி அழுது கொண்டிருக்கிறார் என்று பாரு எல்லாம் உனக்காக தான் பண்ணுறாங்க, எல்லாமே உன்னால் தான் என கோபி திட்டுகிறார். இதுக்கு மேலே என்னால் பொறுமையாக இருக்க முடியாது உனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம் கிளம்பு வீட்டை விட்டு என சொல்கிறார்.

ஈஸ்வரி கோபியை தடுக்க, கோபி என்ன செய்ய சொல்றீங்க என்ன இது உன் பிரச்சனை நீ தான் இனிமேல் இதை பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வீட்டை விட்டு போறியா இல்லையா என கேட்கிறார். இப்போ நீ போகவில்லை என சொல்லி அவரை வெளியே தள்ளுகிறார். அப்போது சரியான நேரத்தில் எழில் வருகிறார். அப்போது தான் பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது. உடனே இனியா எழிலை கட்டியணைத்து எங்கே போன என கேட்கிறார்.

பின் எழில், அம்மா ஏன் அழுகிறாய் உன் பணம் கிடைத்துவிட்டது என பாக்கியா கையில் பணத்தை கொடுக்கிறார். சிரி அம்மா என எழில் சொல்ல, அனைவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். பணம் கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் பாக்கியா இருக்க, நீ மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தால் இந்த வீட்டில் என்னென்னமோ நடக்கும் என கோபியின் அப்பா சொல்கிறார். அப்படி நடக்க நான் விடமாட்டேன் என எழில் சொல்ல, செல்வியை பணம் கொடுக்கவேண்டிய நோட்டை எடுத்து வர சொல்கிறார்.

அவர் செல்ல எழில் கோபியை முறைத்து பார்க்கிறார். பின் அனைவருக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைக்க, அனைவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அனைவருக்கும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பாக்கியாவிடம் கொடுக்கிறார். அப்போது கோபி ஆபிஸ் கிளம்ப, இனியா அப்பா அம்மாவை வீட்டை விட்டு போக சொல்லிவிட்டார் அண்ணா நான் பயந்துட்டேன் என சொல்ல, அப்படியா சொன்னாரு என எழில் கேட்கிறார். பின் பாக்கியா எப்படி எழில் இதெல்லாம் என சொல்ல, எல்லாம் கனவு மாதிரி இருக்கிறது என பாக்கியா சொல்கிறார்.

சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மறுபக்கம் அமிர்தா வீட்டில் எழில் மாதிரி ஒருவரை பார்த்ததாக அமிர்தா அப்பா சொல்கிறார். உடனே அமிர்தா பாவம் இவர்களுக்காக வந்திருக்கலாம் என சொல்கிறார்.எழில் நம்பர் கொடு நான் கேட்கிறேன் என சொல்ல, அதெல்லாம் வராமல் இருக்கமாட்டான் என சொல்ல அமிர்தா, அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என கோவமாக சொல்கிறார். பின் அமிர்தா அப்பா அவரை பற்றி பேசினால் ஏன் கோபப்படுகிறாய் இருவருக்கும் சண்டையா என கேட்கிறார்.

அவர் ஏன் வரவில்லை என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் வந்தாரு பாசம் அதிகம் காட்டினார். அதற்காக நம்ம மூன்று பேர் தான் இந்த ஊரில், வேறு யாராவது பழகினாலும் அவங்க வேறு ஆள்கள் தான் என சொல்லிவிட்டு உள்ளே சென்று எப்போ பார்த்தாலும் எழில் எழில் என பேசிக் கொண்டிருக்கின்றனர் என அமிர்தா கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!