தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தீவிரமாக இருந்து வந்தது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. தற்போது வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற இது முக்கியம்!

இந்நிலையில் வானிலை மையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது என்றும், கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!