ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி – இன்றைய “பாக்கியலட்சுமி”எபிசோட்!

0
ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி - இன்றைய
ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி - இன்றைய "பாக்கியலட்சுமி"எபிசோட்!
ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி – இன்றைய “பாக்கியலட்சுமி”எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியாவின் புது இடத்தை பால் காய்ச்ச இருக்கிறார். எழில் புது தொழில் தொடக்கத்திற்கு பெரிய விஐபி வருவார்கள் என சொல்கிறார்.பின் ரஞ்சித் பிரியா ராமன் ஜோடி வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அவர் அம்மாவிற்கு போன் செய்து பால் காய்ச்ச கண்டிப்பாக வந்துரு என சொல்கிறார். ஏற்கனவே செய்து கொண்டிருக்க தொழில் தான மீண்டும் வேற இடத்தில் செய்ய போகிறாய் அப்பறம் என்ன எல்லாரையும் கூப்பிடுகிறாய் என கேட்கிறார். எழில் அலுவலகம் திறப்பிற்கு பெரிய விஐபி வருவார்கள் என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என எழில் சொல்கிறார். பின் பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் அவர்களிடம் சென்று எழில் என் அம்மா கடை திறப்பிற்கு நீங்க வர முடியும் என சொல்கிறார். பின் கோபியிடம் இது பற்றி சொல்ல, கோபி ராதிகாவை பார்க்க போகிறார்.

வீட்டில் பெங்களூரு செல்வதாக சொல்லிவிட்டு கோபி போக ராமமூர்த்தி சந்தேகத்துடன் இருக்கிறார். கோபி ராதிகா மருத்துவமனைக்கு சென்று அங்கையே தங்க இருப்பதாக சொல்கிறார். பின் ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு வந்து பார்க்க, அங்கே யாரும் இல்லாமல் இருக்கின்றனர். என்ன நடந்தது என தெரியாமல் ராமமூர்த்தி இருக்கிறார். பின் ராதிகா அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.அதற்கு சினிமாவில் இருந்து ஆட்கள் வர வேண்டும். பாக்கியாவின் மகன் சினிமாவில் தான் இருக்கிறார். அதனால் அவரை வர சொல்ல வேண்டும் போனை கொடுங்கள் என சொல்கிறார்.

கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கோபி என் நண்பருக்கு ரஞ்சித், பிரியா ராமன் மேனேஜர் தெரிந்தவர் தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் அவர் சென்று மேனேஜரிடம் பேச அவரும் நிகழ்ச்சிக்கு வரேன் என சொல்கிறார். பாக்கியா ராதிகா வீட்டிற்கு வர, அங்கே மயூராவும் அவர் அம்மா மட்டும் இருக்கிறார். ராதிகா எங்கே என கேட்க, அவளுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது மருத்துவமனையில் இருப்பதாக சொல்கிறார். பின் பாக்கியா ராதிகாவை பார்க்க மருத்துவமனை செல்ல, அங்கே கோபியை பார்க்கிறார். கோபி எதோ பொய் சொல்லி சமாளிக்க, செல்விக்கு சந்தேகம் வருகிறது.

சார் பெங்களூரு போறேன் என சொல்லிவிட்டு இங்கே வந்திருக்கார் என சந்தேகமாக பார்க்க, பாக்கியா வேண்டாம் என கோவமாக பார்க்கிறார். செல்வி ஆட்டோ பிடிக்க செல்ல, பாக்கியா கோபியின் காரை பார்க்கிறார். அப்போது கோபி விமானத்தில் வந்ததாக சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. பின் செல்வியும் சந்தேகப்பட, செல்வி சார் எங்கையும் போகவில்லை இங்கே தான் இருக்காரு என சொல்ல, பாக்கியா ஒன்றும் புரியாமல் இருக்கிறார். பின் கோபி ராதிகாவை பார்க்க வர, அவரிடம் ரஞ்சித் பிரியா வருவதை பற்றி சொல்கிறார். பின் பாக்கியா வந்ததை சொல்கிறார்.

பாக்கியா வீட்டில் சோகமாக இருக்க ராமமூர்த்தி பால் காய்ச்ச தேவையான பொருள்களை எடுத்து வைக்கிறார். அப்போது கோபி வர என்ன பாக்கியா நாளைக்கு வரேன் என சொன்னேன் ஆனால் இன்றே வந்துவிட்டேன் சந்தோசம் தான என கேட்கிறார். பாக்கியா ஒன்றும் சொல்லாமல் இருக்க, எழில் எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்கிறார். அப்பாவை பற்றி தான் நினைக்கிறன் என சொல்ல, அவரு எதாவது பொய் சொல்கிறாரா என கேட்கிறார். என்னாச்சு என எழில் கேட்க, அவரு எதாவது மறைச்சு பொய் சொன்னால் என்னால் தாங்க முடியாது என சொல்கிறார்.

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு டிச.18 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

நாளைக்கு உனக்கு முக்கியமான நாள் அதை நினைத்து சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். எழில் அம்மா அந்த பழைய விஷயத்தை பார்த்திருப்பார்களா என எழில் நினைக்கிறார். மறுநாள் பால் காய்ச்ச எல்லாரும் தயாராக, பால் காய்ச்சும் இடத்திற்கு செல்கின்றனர். ராதிகா கோபிக்கு போன் செய்து ஏற்பாடுகள் நடந்துவிட்டதா என கேட்க, எல்லாம் சரியாக வந்துவிடும் என கோபி சொல்கிறார். பாக்கியா இடத்தில் ரஞ்சித் தம்பதி புகைப்படத்தை பார்க்காமல் இருக்கிறார் கோபி. எல்லாரும் இடம் அருமையாக இருக்கிறது என சொல்ல, எல்லா ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

ராதிகா கோபிக்கு போன் செய்து அலுவலகத்தில் இருந்து போன் வந்தது இன்னும் விருந்தினர் வரவில்லையாம் என சொல்கிறார். கோபி மீண்டும் மேனேஜருக்கு போன் செய்கிறார். பின் இனியா கோபியை போட்டோ எடுக்க அதில் சிறப்பு விருந்தினர் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபி நண்பருக்கு போன் செய்ய எப்படி இரண்டு இடங்களுக்கும் போவார்கள் என தெரியாமல் இருக்கிறார். அப்போது அவர் நண்பர் ராதிகா அலுவலகத்திற்கு தான் போவார்கள் என சொல்ல, அப்போது தான் கோபிக்கு நிம்மதியாக இருக்கிறது.

எல்லாரும் இன்னும் விருந்தினர் வராமல் இருக்காங்க என கேட்க, கண்டிப்பா வருவாங்க என பாக்கியா சொல்கிறார். அமிர்தா குடும்பத்தினர் வர கோபி என்ன அவர்களை போய் அப்பா என கூப்பிடுகிறான் என செழியனிடம் கேட்கிறார். எல்லாரும் வந்துவிட சிறப்பு விருந்தினர் இன்னும் வரவில்லை என அனைவரும் பதட்டம் அடைகின்றனர். எல்லாரும் அவங்க வராமல் இருந்தால் என்ன ஆகும் என பதட்டத்தில் இருக்க ஒரு கார் வந்து இறங்குகிறது. அதில் ரஞ்சித் பிரியா ராமன் வந்து இறங்குகின்றனர். எல்லாரும் அதை பார்த்து சந்தோசப்பட கோபி அதிர்ச்சி அடைகிறார்

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சிக்கு உள்ள வியாதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

அப்போது தான் ரஞ்சித் மேனேஜர் வேறு வழியில் போக நாம கமிட் பண்ண நிகழ்ச்சிக்கு தான் போறோம் என சொல்கிறார். அப்போது தான் மேனேஜர் விஷயத்தை சொல்ல, எழில் வீட்டு விசேஷத்திற்கு போக வேண்டும் என சொல்லி மாற்றியதை நினைத்து பார்க்கிறார். ரஞ்சித் சார் வண்டியை திருப்பு என சொல்ல வண்டியை திருப்புகின்றனர். எல்லாரும் சிறப்பு விருந்தினரை பார்த்து சந்தோசப்பட, ஜெனி சென்று வரவேற்கிறார். சிறப்பு விருந்தினர் உள்ளே வந்து எழிலிடம் நீ உண்மையாகவே எனக்கு தம்பி மாதிரி என சொல்கிறார். ராதிகாவிடம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் கோபி நிற்கிறார்.

ப்ரியா ராமன் பாக்கியா பற்றி பெருமையாக பேச, உங்களது முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் என சொல்கிறார். ஆர்வமும் தைரியமும் இருந்தால் யாரும் தோற்று போக மாட்டார்கள் நீங்க தொடங்கிய இந்த முயற்சி பெரிய அளவில் போக வேண்டும் என சொல்கிறார். எழில் பாக்கியாவை பேச சொல்ல, நான் சிறிதாக தொடங்கினேன் வீட்டிற்கு உள்ளே இருப்பதால் அம்மாவிற்கு நம்ம கையில் இருந்து காசு கொடுக்கமுடியவில்லை. அதனால் அம்மாவிற்காக தான் நான் இதை தொடங்கினேன், மாசலா கம்பெனி தொடங்கினோம் ஆனால் இங்கே வந்து நிற்கிறேன் என பாக்கியா சொல்கிறார். கோபி ராதிகாவிடம் எப்படி பேசுவது என தெரியாமல் இருக்கிறார். ப்ரியா ராமன் ரஞ்சித் நன்றாக சாப்பிட்டு இருக்க, போட்டோ எடுக்க கூப்பிடுகிறார்கள் என சொல்கிறார். அப்போது ராதிகா போன் செய்ய என்னை மன்னித்துவிடு என கோபி சொல்கிறார். உடனே கோவப்பட்டு ராதிகா போனை வைக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!