கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி - இன்றைய
கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவும் பாரதியும் ஒரே ரூமில் தூங்க, பழைய நினைவுகளுடன் நெருக்கமாக இருக்கின்றனர். பின் கண்ணம்மா அப்பா எதுவும் பிரச்சனை இல்லாமல் இருக்காங்களா என சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா ரூமிற்கு வர பாரதி பக்கத்து வீட்டில் இருப்பவர் என சொல்லி இப்படி எல்லாரையும் கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்துறாங்க என கடுப்பாகிறார். பின் கண்ணம்மா என்ன செய்ய பக்கத்துக்கு வீட்டில் குடி வந்துருக்காங்க நாம தான உதவி செய்ய வேண்டும் என சொல்ல, பாரதி இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த வீட்டை காலி செய்து எல்லாரும் இங்கையே வந்துருவாங்க என சொல்கிறார். பின் பாரதி எனக்கு என்ன நான் இன்னும் 4 நாட்கள் தான் இருப்பேன் என சொல்கிறார்.

பின் கண்ணம்மா கட்டிலில் படுக்க வர பாரதி என்ன செய்ய போகிறாய் என அதிர்ச்சி அடைகிறார். மேலே படுக்க போறேன் என சொல்ல, அப்போ நான் எங்கே படுப்பேன் என கேட்கிறார். நீங்க கிழே படுங்க என சொல்ல, நான் எவ்வளவு பெரிய டாக்டர் என தெரியுமா என்னை கிழே படுக்க சொல்ற என கேட்க கண்ணம்மா இது என் வீடு என் கட்டில் நான் மேலே தான் படுப்பேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா படுக்க நடுவே தலைகாணி வைக்கிறார்கள். பின் தூக்கத்தில் பாரதி கண்ணம்மா மீது நெருக்கமாக வருகிறார்.

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள் – அமைச்சர் விளக்கம்!

அப்போது அவருக்கு பழைய நினைவுகள் வருகிறது. கண்ணம்மாவிற்கு ஜிம்மிக்கி வாங்கி கொடுத்து சந்தோசமாக இருந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது. பின் பாரதி பதறி எழுந்து விட கண்ணம்மா உடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து வருத்தப்படுகிறார். கண்ணம்மா மீண்டும் புரண்டு படுக்க வேண்டும் என்றே கண்ணம்மா கையை போடுகிறார். பாரதி எழுந்து பார்க்க கண்ணம்மா தெரியாதது போல படுத்து கொள்கிறார்.

மறுபக்கம் சௌந்தர்யா வீட்டிற்கு வந்த சண்முகம் கண்ணம்மாவும் மாப்பிள்ளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்காங்களா என கேட்கிறார். இருக்காங்க என சௌந்தர்யா சொல்ல, மாப்பிள்ளை ரோடில் பார்த்தால் கூட சண்டை போடுவார் அவர் எப்படி இப்போது சந்தோசமாக பார்த்துக் கொள்கிறார் என சந்தேகமாக கேட்க பின் கண்ணம்மாவை பாரதி அடித்து கொடுமைப்படுத்துவது போல கேட்ட கனவெல்லாம் வருகிறது என சொல்ல, கோவப்பட்ட சௌந்தர்யா கிளம்புங்கள் நேரில் உங்களுக்கு காட்டுகிறேன் என சொல்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சிக்கு உள்ள வியாதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இருவரும் கண்ணம்மா வீட்டிற்கு போக, அங்கே பாரதி மருத்துவமனையில் முக்கியமான வேலை என கிளம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா சமைக்க நேரமாக எவ்வளவு நேரம் என பாரதி கோவத்தில் இருக்கிறார். சௌந்தர்யா சண்முகம் ஒளிந்து நின்று பார்க்க, கண்ணம்மா சாப்பாடு கொண்டு வரும் போது பாரதி கத்த அவர் அதை காலில் போட்டுக் கொள்கிறார். உடனே பாரதி பதறி போய் கண்ணம்மாவை உட்காரவைத்து காலை பார்க்கிறார். ஒன்றுமில்லை சரியாகிவிடும் என சொல்ல, அதை எல்லாம் சண்முகம் பார்த்து சந்தோசப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!