பாக்கியா வீட்டில் இருக்க சொல்லும் குடும்பத்தினர், இனியாவை முடிவு செய்ய சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியா வீட்டில் இருக்க சொல்லும் குடும்பத்தினர், இனியாவை முடிவு செய்ய சொல்லும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
பாக்கியா வீட்டில் இருக்க சொல்லும் குடும்பத்தினர், இனியாவை முடிவு செய்ய சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டை விட்டு போக முடிவு செய்துள்ள நிலையில், செழியனும் ஈஸ்வரியும் அவருடைய முடிவு தவறு என சொல்லி சத்தம் போடுகிறார். பின் இனியா அம்மா வேண்டும் என சொல்ல, பாக்கியா இனியாவை முடிவெடுக்க சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ஈஸ்வரி பாக்கியாவை இரண்டில் ஒரு முடிவெடுக்க இருப்பது கட்டாயம் ஆனால் நாம எடுக்கும் முடிவில் சின்ன தவறு கூட மொத்த வாழ்க்கையை மாற்றிவிடும் எனசொல்கிறார். பின் தாத்தா பாக்கியா இங்கே இருக்கும் எல்லாரையும் விட உன்னை நான் நம்புகிறேன். ஆனால் நீ எடுத்த முடிவு என தவறு என சொல்கிறார். நீ இந்த வீட்டில் இருந்து ஆள வேண்டும். எத்தனை வருஷம் ஆனாலும் அம்மா உறவு மாறாது அவளுக்காக நீ இங்கே இருக்க வேண்டும் என சொல்ல, உடனே கோபி நான் இங்கே கத்திக் கொண்டிருக்கேன் என் பேச்சை கேட்காமல் இருக்கீங்க என கேட்கிறார்.

உடனே தாத்தா எல்லாம் உன்னால் தான் இப்போ நீ என்னமோ எதுவும் பேசாதது போல பண்ணுகிறாய். 3 பிள்ளைகளுக்கு அப்பா போலவா நடந்து கொள்கிறாய். எல்லாத்துக்கும் நீ தான் காரணம். ஆமாம் பாக்கியா எடுத்த முடிவு தவறு தான் ஆனால் நீ செய்ததை நியாயப்படுத்ததே என சொல்கிறார். பின் கோபி நான் தான் தவறு செய்தேன் அதற்காக அவளுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என கோபி கேட்கிறார். பின் தாத்தா மன்னிப்பு என்பது வாயால் கேட்க கூடாது அது மனதால் உணர வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஈஸ்வரி இன்னும் உனக்கு மனம் இறங்கவில்லையா என கேட்க கோபி அவளை வெளியே போக சொல்லுங்கள். என்னமோ வாய்பேச தெரியாதது போல நிற்கிறாள், கோர்ட்டில் இவள் பேசியதை கேட்டு என்னமோ நான் தான் கொடுமைப்படுத்தியது போல நினைப்பார்கள் என சொல்கிறார். பின் ஈஸ்வரி யாரு தவறு செய்தாலும் எல்லாரும் இந்த குடும்பத்திற்குள் தான் இருக்க வேண்டும் என சொல்கிறார். உன்னை எங்களுடைய பெண் போல தான் நினைத்து தான் பேசுகிறோம். இவர் கோபிக்கு ஆதரவாக பேசாமல் உனக்கு தான் பேசுகிறார்.ஆனால் நீ இப்படி முடிவு எடுக்க எப்படி மனசு வந்தது என கேட்கிறார்.

எழில் எல்லாரும் இப்படி பேசி தான் உன்னை இத்தனை நாள் முடிவெடுக்க முடியாமல் வைத்திருந்தார்கள் ஆனால் இப்போது நீ அப்படி இருக்காதே என சொல்ல, ஈஸ்வரி அம்மாவிற்கு விவாகரத்து வாங்கி கொடுப்பானான் பிள்ளை. அம்மா அப்பாவை பிரித்து இருப்பது ஒரு நல்ல பிள்ளை செய்வது இல்லை என சொல்கிறார். பின் செழியன் இத்தனை பேர் சொல்கிறோம் ஏன் கேட்கவில்லை அப்பா செய்தது தவறு தான் ஆனால் அம்மா செய்வதும் தவறு தான் பாட்டி சொல்லும் இடத்தில் இருந்து தான் நானும் பேசுகிறேன். வீட்டை விட்டு போவது எல்லாம் தவறு என சொல்கிறார்.

இனியா அம்மா எல்லாரும் சொல்கிறார்கள் நீ ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம் இருங்கள் என சொல்கிறார். பின் பாக்கியா இது நான் எடுத்த முடிவு இல்லை. இந்த முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். நான் உன் அம்மா அது எப்போதும் மாறாது. இப்போ இப்படி ஒரு நிலைமைக்கு நானா காரணம் இது இன்னொருத்தர் எடுத்த முடிவு அதனால் நான் உன்னை விட்டு போறேன் என அர்த்தம் இல்லை என சொல்ல செல்வி பாக்கியா அக்கா உன்னை பார்க்காமல் இருக்காது என சொல்கிறார். இனியா அதெல்லாம் பழைய அம்மா இந்த அம்மா அப்படி இல்லை என சொல்கிறார்.

சபரிமலை கோவிலில் பிரசாதம் குறித்த முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

சூழ்நிலையால் தான் சிலர் அந்த இடத்திற்கு போகவேண்டிய நிலைமை இருக்கிறது. இன்னைக்கு நீ பார்க்கும் இந்த மாற்றம் நான் தீர்மானித்தது இல்லை. மேலும் இந்த மாற்றத்திற்கும் பாக்கியா உன் அம்மா என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. அம்மா என்ற ஸ்தானத்தில் இருந்து நான் விலக போவதில்லை என பாக்கியா சொல்ல, ஜெனி அப்போ நீங்க இனியாவிற்காக இங்கே இருக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் பாக்கியா இல்லை ஜெனி நான் இல்லை என்றாலும் நீ தான் இனியாவிற்கு எல்லாம் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பின் பாக்கியா என் வாழ்க்கையில் எல்லா முடிவையும் எல்லாரும் எடுத்து இருக்காங்க ஆனால் இப்போது முதல் தடவை என் வாழ்க்கையில் முடிவை நான் எடுத்து இருக்கேன் என சொல்கிறார். பின் கோபி என் மகளை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என சொல்ல, வீட்டை விட்டு வெளியே போ என சொல்கிறார். ஆனால் பாக்கியா இனியாவிடம் உனக்கு அம்மாவுடன் இருக்க வேண்டுமா அப்பா உடன் இருக்க வேண்டுமா என கேட்கிறார். இனியா என்ன சொல்வது என தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!