கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்க்க வேண்டும் என சொல்லும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோட்!

0
கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்க்க வேண்டும் என சொல்லும் ராதிகா -
கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்க்க வேண்டும் என சொல்லும் ராதிகா - "பாக்கியலட்சுமி" சீரியலில் இன்றைய எபிசோட்!
கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்க்க வேண்டும் என சொல்லும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் பாக்கியாவிடம் கோபி செய்யும் தவறுகளை சொல்ல ஆனால் பாக்கியா கோபி மீது முழு நம்பிக்கையுடன் பேசுகிறார். பின் ராதிகா வீட்டிற்கு கோபி போக குடும்ப புகைப்படத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சொல்கிறார். பின் எழில் பாக்கியா அமிர்தா உடன் திருமணம் பற்றி பேசுகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை எழில் நீ அப்பாவை மிகவும் நம்பாதே என்பது போல பேசுகிறார். அப்போது பாக்கியா நீ இப்படியே பேசினால் அப்பாக்கு போல எனக்கும் நெஞ்சு வலி வந்துவிடும் போல என சொல்கிறார். அப்பாவிற்கு நெஞ்சுவலி எதுவும் வரவில்லை என சொல்ல கேஸ் பிரச்சனையாக இருந்தாலும் வலி வந்தது என பாக்கியா சொல்கிறார். பின் எழில் அவர் நாடகம் ஆடியது போல இருப்பதாக சொல்ல பாக்கியா அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார். பின் நீ படம் எடுத்து எல்லாம் நடிப்பு போல இருக்கிறது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு பதட்டத்துடன் செல்கிறார். என்ன சொல்ல போகிறாள் என தெரியாமல் இருக்க ராதிகா கோவமாக வருகிறார். இரவு நேரமாகிவிட்டது கதவை திறந்து வைத்திருக்காய் என சொல்ல அப்போது ராதிகா கோவமாக பேசுகிறார். என்ன ஆனது ஏன் கோவமாக பேசுகிறாய் என கோபி கேட்க நான் எப்போது வர சொன்னேன் ஆனால் நீங்க எப்போது வரீங்க என கேட்கிறார் ஆபிசில் வேலை இருந்ததாக சொல்ல அப்போது ராதிகா என்னிடம் எதாவது பொய் சொல்றீங்களா என கேட்கிறார். நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என கேட்க, என் கண்ணை பார்த்து உண்மையை சொல்லுங்க என சொல்கிறார்.

நீங்க நிஜமாவே என்னிடம் பொய் சொல்லவில்லையே என கேட்க நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என கோபி கேட்கிறார். நீங்க உங்க குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் உண்மையா என கேட்க ஆமாம் உண்மை தான் என சொல்ல. நான் உங்க குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்கிறார். என்ன திடீரென என கோபி கேட்க, நீங்க சொன்னது போல எல்லாம் இருக்கிறதா என நான் பார்க்க வேண்டும் என சொல்கிறார். உன்னை எப்படி என் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போவது என கோபி கேட்க அப்போ இங்கே வர சொல்லுங்க என சொல்கிறார்.

அது எப்படி முடியும் என கேட்க, குடும்ப புகைப்படம் இருக்கிறதா என கேட்கிறார். வீட்டில் இருப்பதாக சொல்ல, இப்போது கையில் இல்லையா என கேட்கிறார். இல்லை என சொல்ல அது எப்படி குடும்ப புகைப்படம் கையில் இருக்காமல் இருக்கும் என கோபி கேட்கிறார். அப்போது நீ எதற்கு என் குடும்பத்தை பார்க்க வேண்டும் என கேட்க, நான் உங்க குடும்பத்தை பார்த்ததே இல்லையே என ராதிகா சொல்கிறார். எனக்கு உங்க குடும்பத்தை பார்க்க வேண்டும் அவளோ தான் நீங்க கிளம்புங்கள் என சொல்ல ஏன் இவ்வளவு கோவம் என கோபி கேட்கிறார். உங்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் நான் உங்க குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சொல்கிறார்.

சாப்ட்வெர் செய்ய மூர்த்தியிடம் பணம் கேட்ட மீனா, முல்லையிடம் மன்னிப்பு கேட்ட ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

மறுபக்கம் எழில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருக்க எல்லார் பற்றியும் நலம் விசாரிக்கிறார். அப்போது பாக்கியா வர அமிர்தாவிடம் பேசியதாக சொல்கிறார். எழில் அமிர்தா நீ திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். இப்போதே திருமணமா என கேட்க இன்னும் 4 வருஷம் போகட்டும் என சொல்கிறார். அப்போ நிலாவிற்கு 6 வயது ஆகிவிடும் என சொல்ல, அப்போது உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கும் இரண்டு குழந்தைக்கும் வேறுபாடு இருக்க கூடாது என சொல்கிறார். ரொம்ப கஷ்டப்பட வேண்டும் என சொல்கிறார்.

பின் கோபி தனது நண்பரை சந்தித்து விவரத்தை சொல்கிறார். அப்போது அவருடைய நண்பர் எனக்கு தெரிந்த ஒருவர்போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கான் அவனிடம் சொல்லி உன் போட்டோவை மார்பிங் செய்துவிடுவோம் என சொல்ல, கோபி நல்ல ஐடியா என சொல்கிறார். பின் அவருடைய நண்பர் நீ உண்மை எல்லாம் சொல்லிவிடு அது தான் நல்லது என சொல்கிறார். நீ உண்மையை சொல்லிவிட்டு பாக்கியாவுடன் சேர்ந்து வாழ வழியை பாரு என கோபியின் நண்பர் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!