எழிலிற்கு வாழ்த்து சொன்ன கோபி, அம்மாவின் அறிவுரையை ஏற்க மறுக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழிலிற்கு வாழ்த்து சொன்ன கோபி, அம்மாவின் அறிவுரையை ஏற்க மறுக்கும் ராதிகா - இன்றைய
எழிலிற்கு வாழ்த்து சொன்ன கோபி, அம்மாவின் அறிவுரையை ஏற்க மறுக்கும் ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
எழிலிற்கு வாழ்த்து சொன்ன கோபி, அம்மாவின் அறிவுரையை ஏற்க மறுக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் படம் முதல் நாள் தியேட்டரில் வெளியானதை கேள்விப்பட்டு கோபி மிகவும் சந்தோசப்படுகிறார். பின் ராதிகாவின் அம்மா வர கோபி செய்தது சரி எனவும், அவரது குடும்பத்தை பற்றி நினைக்காமல் நீ கோபியை திருமணம் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தூங்கிவிட்டதை பார்த்து பாக்கியா கோபியின் போனை எடுத்து பார்க்கிறார். அப்போது அதில் R என்ற எழுத்தில் ராதிகா பெயர் இருந்ததால் பாக்கியாவிற்கு எதுவும் தெரியவில்லை. அதன் பின் கோபி எழுந்துவிட போனை காணாமல் தேடுகிறார். அப்போது போனை பாக்கியா வைத்திருப்பதை பார்த்து கோபி கோவப்படுகிறார். என்ன வேவு பாக்கிறாயா என கேட்டு பாக்கியாவிடம் கோவமாக பேச பாக்கியா பயந்து போனை வைத்துவிட்டு படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுநாள் எழில் படம் வெளியானதை அடுத்து எழில் பதட்டமாக இருக்கிறார். அப்போது கோபியை ஈஸ்வரி கொஞ்சம் உனக்கு பொறுப்பிருக்கிறதா என கேட்கிறார். ஏன் என்ன பிரச்சனை என கேட்க அப்போது ஈஸ்வரி இன்று எழில் படம் தியேட்டரில் வெளியாகிறது எப்படி இருக்கிறது என தெரியாமல் அவர் பதட்டமாக இருப்பதாக சொல்கிறார். அப்போது எழில் படம் நன்றாக இருக்கும் நீ கவலைப்படாதே நான் கண்டிப்பாக சென்று படம் பாக்கிறேன் என சொல்கிறார். அப்போது இனியா நானும் வருகிறேன் என சொல்கிறார்.

பின் கோபி எழிலிடம் உனக்கு பிடித்தது போல நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என்னை போல உனக்கு வாழ்க்கை அமைந்துவிட கூடாது என சொல்ல, ராமமூர்த்தி தேடினாலும் பாக்கியா போல நல்ல மனைவி கிடைக்கமாட்டாள் என சொல்கிறார். பின் எழிலை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார். பின் ராதிகா வீட்டிற்கு அவருடைய அம்மா வருகிறார். ராதிகா அவரை பார்த்து அதிர்ச்சி அடைய நீங்க என்ன திடீரென வந்திருப்பதாக கேட்கிறார். அப்போது மயூரா சரியாக போனில் பேசவில்லை என சொல்ல, உன் குரலும் சரி இல்லை என சொல்கிறார்.

அப்போது மயூராவிடம் என்ன ஆனது என கேட்டேன் அவள் நீ அவளை அடித்ததாக சொன்னாள் குழந்தையை அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். ராதிகா அழுது கொண்டே சொல்ல அப்போது அவ்வளவு பெரிய பிரச்சனையா என ராதிகாவின் அம்மா கேட்கிறார். ஆமாம் அம்மா கோபி என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல அப்போது ஏன் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்னாரா நான் அப்பவே பார்த்து பழகு என சொன்னேன் ஆனால் நீ கேட்கவில்லை என சொல்கிறார். அப்போதுராதிகா அதெல்லாம் இல்லை அவர் குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொல்கிறார்,

எல்லைமீறி போன குடும்ப சண்டை, கதிரின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

டீச்சர் தான் அவருடைய மனைவி அதை மறைக்க என்னிடம் பல பொய்களை சொன்னார் என சொல்ல அப்போது ராதிகாவின் அம்மா நியும் மயூராவும் தான் முக்கியம் என நினைத்து இத்தனை வேலைகளை செய்தார் இது நல்லது தான என சொல்கிறார். அப்போது ராதிகா டீச்சர் மிகவும் நல்லவர் அவருக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது என சொல்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா அப்படி எல்லாம் சொல்ல கூடாது உனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம் என சொல்ல ஆனால் ராதிகா முடியாது என சொல்கிறார்.

மறுபக்கம் கோபியின் சட்டைகளை அயன் பண்ணி பாக்கியா எடுத்துக் கொண்டு வர அப்போது கோபி இவ்வளவு நேரமா என கேட்கிறார். பின் பாக்கியா உங்களிடம் ஒன்னு கேட்க வேண்டும் என சொல்ல பணம் வேண்டுமா என கேட்கிறார் அதெல்லாம் இல்லை என சொல்ல கோபி அப்போ என்ன என கேட்கிறார். பாக்கியா எழிலிடம் என் வாழ்க்கை போல இருக்க கூடாது என சொன்னதற்கு என்ன காரணம் என கேட்க கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here