எல்லைமீறி போன குடும்ப சண்டை, கதிரின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
எல்லைமீறி போன குடும்ப சண்டை, கதிரின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் - இன்றைய
எல்லைமீறி போன குடும்ப சண்டை, கதிரின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
எல்லைமீறி போன குடும்ப சண்டை, கதிரின் திடீர் முடிவால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் சண்டை விடாமல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மூர்த்தி தன்னுடைய பொறுமையை இழந்து சண்டை போட உடனே கதிர் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என முடிவு எடுக்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் அம்மா தனம் இந்த குடும்பத்திற்காக 15 வருசமாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்ததாக சொல்ல அப்போது மீனாவின் அப்பா அதை நாடகம் என சொல்கிறார். அதை கேட்டு ஜீவாவிற்கு கோவம் வர மீனா அப்பாவின் சட்டையை பிடித்து மரியாதை இல்லாமல் பேசுகிறார். பின் தனம் அம்மா தனத்திற்கு குழந்தை இல்லாமல் இருந்தால் இப்படி செலவு செய்திருக்கமாட்டார்கள் முல்லைக்காக தான் உடனே 5 லட்சம் ஏற்பாடு செய்து டிரீட்மென்ட் செய்ததாக சொல்கிறார்.

உடனே முல்லை அம்மா என் மகளுக்கு எதோ பிச்சை போட்டது போல பேசுறீங்க என கேட்க அனைவருக்கும் இடையே பெரிய சண்டை வருகிறது. அப்போது கண்ணன் எல்லாரும் வெளிய போங்க இது எங்க வீடு என சொல்ல தனம் கண்ணனை அமைதியாக இருக்க சொல்கிறார். முல்லை அம்மா உன்னை அப்பவே சொன்னேன் திருமணம் வேண்டாம் என ஆனால் நீ கேட்காமல் இப்போது பிச்சைக்காரி போல வைத்திருப்பதாக சொல்கிறார். ஜெகா மூர்த்தியை பார்த்து ஏன் பேசாமல் இருக்க என கேட்க தனம் ஏன் இப்படி பேசுகிறாய் என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஒரு 5 லட்சம் செலவு செய்ததை எனக்கு பிச்சை போட்டது போல பேசுறீங்க மாப்பிள்ளை இத்தனை வருஷம் வேலை செய்தும் பணம் இல்லையா என கேட்க அப்போது மீனா அப்பா அந்த பணத்தை எல்லாம் தூக்கி போட்டு வர வேண்டியது தான என சொல்கிறார். கடன் வாங்கி பணம் கொடுத்தேன் என நடிக்க தான் செய்தீர்கள் என சொல்ல மீண்டும் பயங்கரமாக சண்டை வருகிறது. அப்போது முல்லை கோவித்துக் கொண்டு ரூமிற்கு செல்கிறார். முல்லையின் அப்பா ஆறுதல் சொல்ல, முல்லை இப்படி நடக்கும் என தெரிந்தால் நான் வந்திருக்க மாட்டேன் என சொல்கிறார்.

முல்லை அம்மா வர நீ தான் காரணம் என சொல்கிறார். பின் வெளியே வந்து முல்லை அழ நீ தான் காரணம் என சொல்கிறார். தனம் நன்றாக நாடகம் போடுவதாக சொல்ல அப்போது மூர்த்தி கோவப்பட்டு கத்துகிறார். இதுக்கு முன்னாடி செலவு பற்றி பேசியது எல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா என கேட்கிறார். மீனா அப்பா போல இருந்தால் நீயும் நன்றாக இருந்திருப்ப என சொல்ல ஜெகா என் தங்கச்சி என்ன ராஜ்ஜியம் செய்தார் என கேட்கிறார். நான் என் தங்கச்சியை கூட்டிக் கொண்டு சென்று விடுகிறோம் உங்க பொண்ணை ராஜ்யம் செய்ய சொல்லுங்க என சொல்கிறார்.

உடனே கஸ்தூரி இப்போ வரை ரூம் இல்லாமல் கொசு கடியில் குழந்தையுடன் படுகிறாள் அதெல்லாம் யாருக்கும் தெரியாது என சொல்கிறார். அப்போது முல்லை அம்மா 18 வருஷம் ரூமில் தான தூங்கினால் என சொல்கிறார். பின் மீண்டும் சண்டை வர மூர்த்தி எல்லாரும் அமைதியாக இருங்க என சொல்லிவிட்டு ஜீவா கதிர் கண்ணனிடம் நானும் உன் அண்ணியும் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். கடையை பிரிக்க வேண்டுமா இல்லை வீட்டை பிரிக்க வேண்டுமா என கேட்க அப்போது மீனாவின் அப்பா நாடகத்தை போட்டு எல்லாரையும் அமைதியாக இருக்க வைக்கிறார் என சொல்கிறார்.

ஹேமாவின் கேள்விகளுக்கு கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி, ரோஹித்தியிடம் காதலிப்பதாக சொன்ன வெண்பா – இன்றைய எபிசோட்!

அப்போது மூர்த்தி யாரு நாடகம் போடுவது என கேட்டு நீங்க கடையை பார்த்துக் கொண்டால் சொல்லுங்கள் நானும் தனமும் வெளியே போகிறேன் என சொல்ல அப்போது கதிர் நான் போய்விடுகிறேன் என சொல்கிறார். எல்லாரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். தனம் கதிரை சும்மா இருக்க சொல்ல, கதிர் நான் பணத்தை கொடுத்துவிடுகிறேன் முல்லை வாங்கிய எல்லா பணத்தையும் நான் குடுப்பேன் எனக்கு நேரம் கொடுங்கள் என சொல்ல கடையில் பணத்தை எடுத்து கொடுப்பீங்க வேற என்ன செய்ய முடியும் என கேட்கிறார். அப்போது கதிர் நான் வேறு வேலை செய்து பணத்தை கொடுப்பேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!