கோபி பற்றிய உண்மையை ஈஸ்வரியிடம் சொன்ன ராஜேஷ், அதிர்ச்சியில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி பற்றிய உண்மையை ஈஸ்வரியிடம் சொன்ன ராஜேஷ், அதிர்ச்சியில் எழில் - இன்றைய
கோபி பற்றிய உண்மையை ஈஸ்வரியிடம் சொன்ன ராஜேஷ், அதிர்ச்சியில் எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி பற்றிய உண்மையை ஈஸ்வரியிடம் சொன்ன ராஜேஷ், அதிர்ச்சியில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் மீண்டும் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். மறுபக்கம் ராஜேஷ் கோபி வீட்டிற்கு சென்று ஈஸ்வரியிடம் எல்லா உண்மையையும் சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி நம்பாமல் இருக்க ராஜேஷ் எழிலிடம் ஆதாரத்துடன் எல்லாத்தையும் காட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிடம் மயூரா எனக்கு உன்னுடன் வருவது பிடிக்கவில்லை என சொல்கிறார். ராதிகா என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சொல்ல அதை கேட்டு மயூரா போ என் ஸ்கூல் மிஸ்ஸிடம் தான TC வாங்குவாய் அவரிடம் எனக்கு இதில் இஷ்டம் இல்லை என சொல்வேன் என சொல்கிறார். ராதிகாவிற்கு அதை கேட்டு கோவம் வர மயூராவை அடித்துவிடுகிறார். பின் ராதிகாவின் அம்மா உன்னுடைய முடிவிற்கு எல்லாம் குழந்தையை இழுக்க நினைத்தால் அவள் வரமாட்டாள் என சொல்ல ராதிகாவை அடித்துவிடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

உனக்கு எப்படி இருக்கிறதோ அது போல தான் குழந்தைக்கும் இருக்கும் என சொல்கிறார். பின் மயூராவை உள்ளே அழைத்து செல்கிறார். பின் கோபியை ரோட்டில் ராஜேஷ் சந்திக்கிறார். அப்போது ராஜேஷ் நீ சொல்வது எல்லாம் நம்புவது போல இல்லை உண்மையாகவே உன் மனைவியை நீ விவாகரத்து செய்ய போகிறாயா என கேட்க கோபி உன்னிடம் எல்லாம் எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக்கு நிறைய வேலை இருப்பதாக கோவமாக சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகாவின் அண்ணன் வக்கீலை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். ராதிகா எதற்கு அவரை சந்தித்தீர்கள் என கேட்க அவர் தான் இன்னும் சில நாட்களில் விவாகரத்து கிடைத்துவிடும் என சொன்னார். கோபியின் மனைவி முழு மனதுடன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். உனக்கு என்ன அதில் பிரச்சனை என கேட்க பாக்கியாவின் வெகுளி தனத்தை பயன்படுத்தி கோபி ஏமாற்றி இருக்கிறார் என ராதிகா சொல்கிறார். அப்படி எல்லாம் கோபி செய்யமாட்டார் என ராதிகாவின் அம்மா சொல்ல அப்போது கோபி வருகிறார்.

கோபி வந்ததை பார்த்து ராதிகா சத்தம் போட அப்போது கோபி என்னால் உன்னையும் மயூராவையும் விட்டு இருக்க முடியாது. ஏன் என்னை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் எனக்கு உண்மையாகவே என் மனைவியை பிடிக்காது என் மகள் இனியாவிற்காக தான் அந்த வீட்டிற்கு செல்கிறேன். என் மகளை இங்கே கூட்டிக் கொண்டு வந்துவிடுவேன் அப்பறம் மயூராவை நன்றாக பார்த்துக் கொள்வோம் என சொல்ல ராதிகா நீங்க என்ன சொன்னாலும் மனது மாறாது என சொல்கிறார்.

தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மறுபக்கம் ராஜேஷ் கோபி வீட்டிற்கு வருகிறார். ராஜேஷை பார்த்து தாத்தா வெளியே போ என சத்தம் போட ஈஸ்வரி நீ அன்று இவரிடம் சண்டை போட்டவர் தான என கேட்கிறார். அப்போது ராஜேஷ் நான் ஒன்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறேன் என சொல்ல, ஆனால் தாத்தா ஒன்றும் சொல்ல வேண்டாம் கிளம்பு என சொல்கிறார். இனியா பயந்து போய் எழிலை அழைத்து வருகிறார். அப்போது எழில் ராஜேஷை பார்த்து வெளியே போக சொல்ல ஈஸ்வரி எல்லாரும் அமைதியாக இருங்க அவன் தான் எதோ சொல்ல வருகிறான் என கேட்கிறார்,

அப்போது ராஜேஷ் இவங்க இருவருக்கும் தெரிந்தும் அமைதியாக இருக்கிறார்கள் என சொல்கிறார். பின் ஈஸ்வரி சொல்ல சொல்ல உங்க மகனிற்கு தான் குடும்பம் இருக்கிறது ஏன் என் குடும்பத்தை சீரழிகிறார் என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி என்ன சொல்கிறார் என் மகனை பற்றி பேசினால் வாய் அழுகி விடும் என சொல்ல உங்க மகன் எதற்கு தினமும் என் பொண்டாட்டியை பார்க்க வருகிறான் என் மகள் மீது அவருக்கு என்ன அக்கறை என கேட்க ஈஸ்வரி அதை நம்பமாட்டேன் என சொல்கிறார். அப்படியா அப்போ தினமும் எதற்கு இரவு என் வீட்டில் இருக்கிறான் என சொல்ல ஈஸ்வரி நான் இதை நம்பமாட்டேன் என சொல்கிறார்.

பின் எழில் தாத்தா ராஜேஷை வெளியே அனுப்ப எழில் வெளியே தள்ளிக் கொண்டு வருகிறார். வயதானவர்களுக்கு தாங்க முடியாத விஷயத்தை இப்படியா சொல்வாய் என கேட்க, ராஜேஷ் உன் அப்பாவை ஒழுங்கா இருக்க சொல்லி சொல்ல சொன்னேன் ஏன் சொல்லவில்லை என கேட்கிறார். அப்போது எழில் அவர் தான் எல்லாத்தையும் விட்டுவிட்டார் என சொல்ல யார் சொன்னா என் மனைவியை தான் கல்யாணம் செய்வேன் எனபிடிவாதமாக இருக்கிறான் என சொல்கிறார்.

என் மனைவியுடன் ரோட்டில் சண்டை போட அதை அழுது கொண்டே என் மகள் பார்த்துக் கொண்டிருக்கிறாள். போலீஸ் ஸ்டேஷன் சென்றால் உன் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு என் மனைவியை திருமணம் செய்ய இருப்பதாக எழுதி கொடுக்கிறான் என சொல்லி வீடியோவை காட்டுகிறார். அதை பார்த்து எழில் அதிர்ச்சி அடைய ராஜேஷ் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!