தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி 48½ நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான விநாயகர் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடர்ந்து ராத்திரி மூவர் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது.
TN Job “FB
Group” Join Now
மேலும் நேற்று முதல் 7 நாட்கள் சந்திரசேகரர் பவானி அம்பாள் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக ஆனி பெருந்திருவிழாவில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வீதி உலா செல்லும் பகுதிகளை தடம் பார்த்து செப்பனிட்டு உழவாரப்பணி செய்வதற்காக திருநாவுக்கரசர் பெருமான் வெள்ளி சப்பரத்தில் மண்வெட்டியுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே இந்த ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் மூடல் – பொருளாதார நெருக்கடி எதிரொலி!
இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை (ஜூலை 11) நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார்.