சென்னையில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

சென்னையில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் (AVNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Company Secretary, Consultant, Manager மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Company Secretary, Consultant, Manager மற்றும் பல்வேறு பணிகளுக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree , PG Diploma, MBA, CA, CMA, என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST / PWD/ Ex-SM / EWS / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!