கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி உடைகளை எடுத்து வைத்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி செய்த தவறுக்கு அவர் தான் வெளியே போக வேண்டும் என ராமமூர்த்தி சொல்ல, ஆனால் இந்த வீட்டை கட்ட நான் நிறைய பணம் செலவு செய்திருப்பதாக கோபி சொல்கிறார். பின் பாக்கியா கோபி உடைகளை எடுத்து வைத்திருப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி நீ தான் எல்லா தவறுக்கும் காரணம் அதனால் நீ தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என சொல்கிறார். நான் எதற்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் கஷ்டப்பட்டு உழைத்து உருவான வீடு, அவள் தான் வெளியே போக வேண்டும் என சொல்ல, எழில் பாக்கியாவை வா அம்மா கிளம்புவோம் என சொல்கிறார். ஆனால் ஜெனி பாக்கியாவின் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறார். தயவு செய்து வெளியே போகாதீங்க, இனியா முகத்தை பாருங்கள் என ஜெனி கெஞ்சுகிறார். ஆனால் செழியன் நீ எதற்கு அவங்களிடம் கெஞ்சுகிறாய். அவங்களுக்கு சுயநலம் தான் முக்கியம் என செழியன் சொல்கிறார்

பின் ஜெனி ஆன்டி இல்லாமல் இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, அங்கிள் செய்த துரோகத்தை பற்றி நினைக்காமல் ஆன்டியை நீ இப்படி பேசுவது சரி இல்லை என ஜெனி சொல்கிறார். பின் ஈஸ்வரி பாத்தியா பாக்கியா நீ எடுத்த முடிவு யாரை எல்லாம் தாக்குகிறது என கேட்கிறார். உடனே பாக்கியா நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை, என் வாழ்க்கையில் வேறு ஒருத்தருக்கு இடம் இருக்கு என தெரிந்த பின் நான் எப்படி அமைதியாக இருப்பேன். எனக்கு ஈகோ எதுவும் இல்லை என பாக்கியா சொல்கிறார். எழில் உன்னை பற்றி இங்கே யாருக்கும் அக்கறை இல்லை, உன்னை இப்போ மட்டும் இல்லை எப்போதும் யாரும் புரிந்து கொள்ள போவதில்லை என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

தாத்தா பாக்கியா பொறுமையாக இருப்பவள் அவளே இந்த முடிவை எடுத்து இருக்கிறாள் என்றால் அவளுடைய மனது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என கேட்கிறார். பாக்கியா தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் இவன் தான் வெளியே போக வேண்டும் என தாத்தா சொல்ல, கோபி இந்த வீட்டிற்கு 40 லட்சம் பணம் செலவு செய்திருக்கிறேன் என சொல்கிறார். இந்த இடத்தை வாங்க நானும் பணம் கொடுத்தேன் என தாத்தா சொல்கிறார். பின் ஈஸ்வரி இப்படி ஒருத்தர் ஒருத்தர் பேசினால் நன்றாக இருக்குமா என் கேட்கிறார்.

எழில் நீங்க என்ன சொன்னாலும் பாட்டிக்கு புரிய போறது, இல்லை அவங்க அவர் என்ன சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என தான் சொல்வாங்க என சொல்கிறார். பின் நீ வா மா என எழில் சொல்கிறார். தப்பு செய்த குற்ற உணர்ச்சி கொஞ்சமாவது அவருக்கு இருக்கிறதா என எழில் கேட்கிறார். உன்னுடைய உழைப்பில் தான் இந்த வீடு வந்தது என எழில் சொல்ல, இனியா நீ சும்மா இரு அண்ணா என சொல்கிறார். பாக்கியா இனியாவிடம் நீ இன்னும் முடிவு எடுக்கவில்லை என கேட்க கோபி நீ சொல்லு செல்லம் டாடி தான் முக்கியம் என சொல்லு என சொல்கிறார்.

பின் இனியா எனக்கு இருவரும் வேண்டும் தனித் தனியாக இருந்தாலும் பரவாயில்லை இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என சொல்கிறார். அம்மா தான் எல்லாம் பார்த்தார்கள் இவர் எதுவும் பார்க்கவில்லை என சொல்ல, கோபி எல்லாரையும் சுமந்து இந்த குடும்பத்தை பார்த்தேன் என சொல்கிறார். இந்த மாதிரி எனக்கு பொருத்தமே இல்லாதவள் உடன் வாழ்ந்து இருக்கேனே அதுவும் பெரிய விஷயம் தான் என சொல்கிறார். வெளியே போய் சம்பாரித்தால் தான் கஷ்டம் தெரியும், நான் ஏன் ஆபிசில் வேலை செய்யணும் நான் இதை எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி இருப்பார்கள், இதுவும் பாசம் தான் என கோபி சொல்கிறார்.

கோபியை வீட்டை விட்டு துரத்தும் பாக்கியா, ஆதரவளிக்கும் குடும்பம்? சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

ஈஸ்வரி பெரிய பசங்களை வைத்து கொண்டு இப்போது வந்து நான் பொருத்தமில்லாதவாளுடன் வாழ்ந்தேன் என சொல்வது நல்லதா என கேட்கிறார். கோபி இதுக்கு மேல் நான் பேசமாட்டேன் மரியாதையாக வெளியே போ என சொல்ல, எழில், அம்மா அதான் சொல்லிட்டாரே வா நாம வெளியே போவோம் என சொல்கிறார். இனிமேல் இங்கே யாரும் பேச கூடாது இவன் தான் வெளியே போக வேண்டும் என சொல்லி கோபியை பிடித்து தள்ளுகிறார். உடனே கோவப்பட்ட கோபி எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என சொல்லி பாக்கியாவின் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே வீசுகிறார். பின் பாக்கியா கோபி உடைகளை எடுத்து பெட்டியில் வைத்திருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய செழியன் கோபியை பார்க்க சொல்கிறார். கோபி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!