Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் காப்பீடு என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது புதிய விதிமுறைகளை போஸ்ட் ஆபீஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. அது குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்:

இந்திய அரசாங்கம் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் இந்திய அஞ்சல் துறையின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் மட்டும் தான் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தில் கொட்டி கிடைக்கும் நன்மைகள் மற்றும் சிறப்பான சலுகைகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்று அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்திய பிரதமர் மோடி இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது காலாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை அரசால் அங்கீகரிக்க பட்ட வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் கணக்குகளை தொடங்கி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் உடைய பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல் இருக்க கூடாது. அதாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இது மட்டுமில்லாமல், ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாதம் ரூபாய் 2500 சேமித்து வந்தால் இந்த திட்டத்தின் இறுதி காலத்தில் ரூபாய் 12,00,000 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி இருந்தனர்.

TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH முறை?

அதனை தொடர்ந்து தற்போது இந்த திட்டத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு புதிய நான்கு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, முதலில் தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம் என்றும், அடுத்தாக, இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்த வில்லை என்றால் கணக்கிற்கு வட்டி வராது என்றும் கூறி இருந்தனர். ஆனால் தற்போது அந்த பணம் செலுத்த விட்டாலும் வட்டி வரும் என்று தெரிவித்து உள்ளனர். அதன் பின்னர், தற்போது, மெச்சூரிட்டிக்கு முன்பு பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும் என்றும் அறிவித்து உள்ளனர். இதனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அஞ்சல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!