ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC லக்கேஜ் விதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC லக்கேஜ் விதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC லக்கேஜ் விதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC லக்கேஜ் விதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !

ரயில் பயணிகளுக்கு, IRCTC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது ரயில் பயணத்தின் போது, கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்வது எப்படி, அபராதம் மற்றும் பிற விவரங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

லக்கேஜ் விதிகள்:

இந்திய ரயில்வே உலகின் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக உள்ளது. இதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பயணத்தில் லக்கேஜ்களையும் கொண்டு செல்கின்றனர். ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லமுடியும் என்று நிறையப் பேருக்குத் தெரியாது. இனிமேல், விமானப் பயணத்தைப் போலவே ரயில்களிலும் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதற்கு கட்டணம் விதிக்கப்படும். மேலும், முன்பதிவு செய்யாமல் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், நீங்கள் சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என IRCTC லக்கேஜ் விதிகளை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்ய நீங்கள் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் 150 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்லலாம். இரண்டாவது வகுப்பு ஏசியில் பயணம் செய்யும்போது 35 கிலோ வரையிலான சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். மேலும் ஏசி 3-அடுக்கு ஸ்லீப்பர்/ஏசி நாற்காலி கார், 40 கிலோ வரையிலான சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் பயணம் செய்யும் போது 40 கிலோ வரையிலான லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனினும் ரயில்வே துறை நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சமாக 80 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

IDBI வங்கியில் 1544 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

ஸ்லீப்பர் கிளாஸ் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் போது 35 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்துச் செல்லலாம், கூடுதல் கட்டணம் செலுத்தி அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். மேலும் ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் லக்கேஜ் அலுவலகத்தில் சாமான்கள், சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தங்கள் லக்கேஜ்கள் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ரயில்வே துறை நிர்ணயித்த வரம்பை விட பயணிகள் அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!