தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அப்போது கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி கேட்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அமைச்சா் முக்கிய தகவல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் அளவிலான நகைக்கு வழங்கப்பட்ட நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை 2021 நவம்பர் 1ல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்ககளில் அதிகாரிகள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. எனவே உண்மையான பயனாளிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 ஊதியம்!

இந்த அறிவிப்பு அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த அதிகாரிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தகவல் அடிப்படையில் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவா்களுக்கான இறுதிப் பட்டியல் 1 வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பட்டியல் பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை உள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு பின் இப்போது வரையுள்ள நகைகளுக்கான வட்டியை அரசே செலுத்தும். இதுவரை கணக்கு மேற்கொண்டதன் அடிப்படையில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்கும் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!