தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 ஊதியம்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.63,200 ஊதியம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.63,200 ஊதியம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 ஊதியம்!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது.

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி தற்போது மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் படித்த இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அப்டேட்!

மேலும் ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கு மாதம் ரூ.19,900 – 63,200 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!