TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த விவரங்கள்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த விவரங்கள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த விவரங்கள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த விவரங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த வகையில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

குரூப் 4 பாடத்திட்டம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக குரூப்-1, குரூப்-3, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-, குரூப்-2, குரூப்-2ஏ,தேர்வுகள் பட்டப் படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பதவிகளுக்கும் நடத்தப்படுகின்றன. மேலும் குரூப்-4 போட்டித் தேர்வு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட பணிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்குதலால், அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

Exams Daily Mobile App Download

தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், நடப்பு ஆண்டு ஆரம்பத்திலிருந்தே போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் வழியில் பயின்றவர்களைக் கருத்தில் கொண்டும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி தமிழ் மொழித் தேர்வை தகுதித் தேர்வாக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. 7382 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை கடந்த 28.04.2022 உடன் முடிவடைந்து உள்ளது.

JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

மேலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். எனவே தேர்வர்கள் முழு பாடத்திட்டத்தையும் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும். இந்த தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பகுதியில், 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். மேலும் முழு விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற தளத்திற்கு  சென்று தேர்ந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!