TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - கட் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - கட் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு திட்டமிட்டபடி கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் எந்தெந்த பிரிவினருக்கு எள்ளளவு இருக்கும் என்று பார்ப்போம்.

TNPSC குரூப் தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி இதில் குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே 21ம் தேதி அறிவித்தபடி நடைபெற்றது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ் என்ன? தயாராகும் வழிமுறைகள்!

இத்தேர்வு மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைத்தாள் மதிப்பீடு மே முதல் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்றும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்வுக்கான ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தேர்வின் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தற்போது தேர்வர்கள் குரூப் 2,2ஏ யின் முதன்மை தேர்வுக்கு தயாராவது அல்லது மற்ற தேர்வுக்கும் தயாராவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இதையடுத்து குரூப் 2,2ஏயின் முதல்நிலை தேர்வில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 5529 பணியிடங்களுக்கு 55000க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் மிகவும் எளிமையானதாகவும் அத்துடன் கணித வினாக்கள் சற்று எளிமையாக கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பொது அறிவுப் பகுதி வினாக்கள் கடினமாக இருந்ததால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கட் மதிப்பெண்கள்

1. பொது பிரிவினர் – 145க்கும் மேற்பட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

2. BC பிரிவினர் – 140க்கும் மேற்பட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

3. MBC பிரிவினர் – 135 – 140 வரை கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்

3. SC, SCA பிரிவினர் – 132-135 வரை கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்

4.ST பிரிவினர் – 130க்கும் மேற்பட்ட கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!