TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ் என்ன? தயாராகும் வழிமுறைகள்!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - சிலபஸ் என்ன? தயாராகும் வழிமுறைகள்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - சிலபஸ் என்ன? தயாராகும் வழிமுறைகள்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ் என்ன? தயாராகும் வழிமுறைகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாரவது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். TET தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

TN TET தேர்வு:

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.

நாமக்கல்லில் நாளை (ஜூன் 15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. . அந்த வகையில் இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.இந்த தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும்.

தேர்வு முறை

முதல் தாள்: 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும்.

பாடத்திட்டம்: குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்:சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்:மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள்:150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும்.

பாடத்திட்டம்: குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு : கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

டெட் தேர்வுக்கு தயாராவது எப்படி:

இந்த தேர்வுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். பேப்பர் 2 எழுதுபவர்கள் கூடுதலாக தாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களையும் தனியாக படித்துக்கொள்ள வேண்டும்.

.தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை என பிரித்துப் படித்துக் கொள்ள வேண்டும் இதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கணிதத்தைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிப்பது போதுமானது. பேப்பர் 2 ல் கணிதத்தை எடுத்தவர்கள் சிலபஸூக்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதேபோல் அறிவியல் பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரையிலான பாடங்களை படிக்க வேண்டும். சமூக அறிவியலுக்கு கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும்.

உளவியல் பாடங்களை கடைசியாக படித்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here