திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

0
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் தொடக்கம்:

இந்தியாவில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் சரியாக இயங்கவில்லை. அதனால் பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையின் பேரில் அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல, பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா காரணமாக கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் தொடங்கி உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரிகள் ஜூலை 1ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் தினசரி மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. அதேப்போல் அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இதையடுத்து 9 பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயிலில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!