தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க வழிமுறைகள்!

0
தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க வழிமுறைகள்!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க வழிமுறைகள்!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க வழிமுறைகள்!

தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணியில் அளவில் பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தியதால் ஆசிரியர்கள் பாடங்களை முழுவதும் முடிக்க முடியாமல் திணறி வந்தனர். இதனால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Exams Daily Mobile App Download

மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும் அதற்கான அறிவிப்பையும் அறிவித்திருந்தார் கல்வித்துறை அமைச்சர். அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரையும் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பின்னர், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூன் 20 ம் தேதி வெளியிடப்பட்டு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும்,  தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும்  மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும்  https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!