SBI, Post Office சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரங்கள்!
கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து முழு விபரத்தை தற்போது பார்ப்போம்.
வட்டி விகிதம் உயர்வு
கொரோனா கால கட்டத்தில் பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ஏராளமானோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் தங்களின் முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக வங்கி மற்றும் இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அத்துடன் இதில் முதலீடு செய்வதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. இதில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மிகுந்த பலன் கிடைக்கிறது.
ஏப்ரல் 7 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
அதனால் இத்திட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெரும்பாலானோர் இணைந்துள்ளனர். இதில் தங்களின் தேவைகளை பொறுத்து முதலீடு செய்யும் காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம். பிக்ஸ்ட் டெபாசிட் திட்டம் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் தான் அதிகளவு லாபங்களை பெற முடிகிறது. அதாவது வங்கிகளில் இத்திட்டத்திற்கு 5.5 சதவீதம் மட்டுமே வட்டி கிடைக்கிறது. ஆனால் அஞ்சல் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. அத்துடன் எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள வட்டி விகிதம் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் கணக்கு தொடங்கும் அனைவருக்கும் 2.9 % முதல் 5.5% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் மூத்த குடிமக்களுக்கு 3.4% முதல் 6.30% வரை வட்டி அளிக்கப்படுகிறது. இதே போல் அஞ்சல் அலுவலகத்தில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். அத்துடன் இதில் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்வதால் 5.5%வட்டி கிடைக்கிறது. மேலும் 5 ஆண்டு காலம் முதலீடு செய்வதால் 6.7% வரை வட்டி விகிதம் வரை கிடைக்கிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்