SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அசத்தலான வருடாந்திர வைப்பு திட்டம்! முழு விவரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அசத்தலான வருடாந்திர வைப்பு திட்டம்! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அசத்தலான வருடாந்திர வைப்பு திட்டம்! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அசத்தலான வருடாந்திர வைப்பு திட்டம்! முழு விவரம் இதோ!

SBI வங்கி வாடிக்கையாளர்ளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வருடாந்திர வைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு டெபாசிட்டில் மாத வருமானம் பெறுவது எப்படி என்ற முழு விவரங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைப்புத் திட்டம்

நாட்டின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, குழந்தைகள் உட்பட அனைத்து நபர்களும் ஒற்றை அல்லது கூட்டு முறை மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும் NRO அல்லது NREல் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது, மூத்த குடிமக்கள் வழக்கமான விகிதத்தை விட இந்த சேமிப்பில் கூடுதல் வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள். இது குறித்த SBI வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஒருவர் சேமிப்பு, நடப்பு அல்லது OD கணக்கைப் பயன்படுத்தி இந்த ஆண்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு, இணைய வங்கிச் சேவை மூலம் இயக்கப்பட்ட முறையான செயல்பாட்டுக் கணக்காக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த கணக்கு செயலற்ற நிலையில் இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது SBI வங்கியின் வருடாந்திர திட்டம் அனைத்து SBI கிளைகளிலும் கிடைக்கிறது. மேலும் இத்திட்டம் 36, 60, 84 அல்லது 120 மாத கால அவகாசத்துடன் வருகிறது. தவிர 3 முதல் 10 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் ஒரு SBI ஆண்டுத்திட்டத்தை துவங்க வருடாந்திர வைப்புத்தொகைக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000 டெபாசிட் செய்யப்பட வேண்டும். இந்த எஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில், பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ கால வைப்புகளுக்கு பொருந்தும் வட்டி விகிதம் வழங்கப்படும். மேலும் இந்த கணக்கிற்கு செலுத்தப்படும் வட்டிக்கு TDS பயன்படுத்தப்படும்.

தமிழகத்தில் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்த TDS தொகையைத் தவிர்க்க இந்த PANஐ சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள டெபாசிட்டருக்கு மரணம் ஏற்பட்டால், அந்த கணக்கை முன்கூட்டியே மூடுவது அங்கீகரிக்கப்படுகிறது. இப்போது எஸ்பிஐயின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி முன்கூட்டியே திரும்பப் பெறுவது டெர்ம் டெபாசிட்டுகளுக்கு இணையான முன்கூட்டிய அபராதத்திற்கு உட்பட்டது ஆகும். இது குறித்த எஸ்பிஐ வங்கியின் தற்போதைய முன்கூட்டிய கணக்கு மூடல் வழிகாட்டுதல்களின்படி, ரூ.5 லட்சத்துக்கும் மேலான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, பொருந்தக்கூடிய அபராதம் 1% மற்றும் டெபாசிட் செய்யும் போது பொருந்தக்கூடிய விகிதத்தை விட 1% குறைவான தொகையாக டெபாசிட்டருக்கு முன்கூட்டியே திரும்பப் பெறும் தொகையாக வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!