SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC புதுப்பிப்பு! நிர்வாகம் எச்சரிக்கை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - KYC புதுப்பிப்பு! நிர்வாகம் எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - KYC புதுப்பிப்பு! நிர்வாகம் எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC புதுப்பிப்பு! நிர்வாகம் எச்சரிக்கை!

கடந்த ஜூலை 1ம் தேதிக்குள் KYC விவரங்களை புதுப்பிக்காததால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி கணக்குகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்பட்டதாக வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். இப்போது KYC செயல்முறையை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

KYC அப்டேட்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை வங்கி நிர்வாகம் நிறுத்தி இருப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் புகார்களின் கூற்றுப்படி, வங்கி கணக்கு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜூலை 1 ஆம் தேதிக்குள் KYC விவரங்களை புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் SBI கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளில் எந்தப் பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்த புகார்களுக்கு ட்வீட் மூலம் பதிலளித்த SBI வங்கி நிர்வாகம், ‘கேஒய்சி என்பது சீரான இடைவெளியில் நடத்தப்படும் ஒரு தொடர்ச்சியான பயிற்சி என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் கணக்கு KYCக்கு வரவேண்டியுள்ளது போல் தெரிகிறது. எனவே செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டது. தயவு செய்து வங்கி கிளைக்கு சென்று கணக்கின் சுமூகமான செயல்பாட்டிற்காக KYC செயல்முறையை விரைந்து முடிக்கவும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது. இப்போது வங்கி வெளியிட்ட இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஒருவர் தங்கள் KYC விவரங்களை புதுப்பிக்க அல்லது நகலை அனுப்ப வங்கி கிளைகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் SBI KYC விவரங்களை புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு நேரில் சென்றோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாக SBI வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘வங்கி வாடிக்கையாளர்கள் முன்பு சமர்ப்பித்த KYC ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் வங்கிக்கு மேலும் சில தகவல்கள் அல்லது ஆவணங்கள் தேவைப்பட்டால், அவர்கள் அசல் KYC ஆவணங்களுடன் கிளைக்கு செல்ல வேண்டும். மற்றும் சமீபத்திய KYC ஆவணங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான ஒரு புகைப்படம் தேவை’ என்று விளக்கம் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!