இந்தியாவில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
இந்தியாவில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்தியாவில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இந்தியாவில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதமான ஜூலை 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மேலும் இந்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. எப்போதும் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் முழு நேரமும் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை மாநிலத்தை பொறுத்து மாறுபடுகிறது.

TNPSC Group 1 தேர்வர்களுக்கு எச்சரிக்கை பதிவு – வெளியான முக்கிய அறிவிப்பு!

பொதுவாக தேசிய விடுமுறைகள் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்கும் பிற பண்டிகை மற்றும் உள்ளூர் விடுமுறைகள் மாறுபடும். தற்போது அனைத்து வங்கி சார்ந்த வேலைகளும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் சில குறிப்பிட்ட வேலைகளை நாம் வங்கிக்கு நேரடியாக சென்று தான் செய்ய முடியும். அதனால் நாம் வங்கிகள் எப்போது இயங்கும் என்பது குறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும், ஏடிஎம் வாயிலாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

வங்கி விடுமுறை:

01.07.2022 – ரதா / காங் யாத்ரா விடுமுறை

07.07.2022 – கார்ச்சி பூஜை வங்கி விடுமுறை

09.07.2022 – இரண்டாவது சனி மற்றும் பக்ரீத் விடுமுறை

10.07.2022 – ஞாயிறு விடுமுறை

11.07.2022 – ஈத்-உல்-அதா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

13.07.2022 – பானு ஜெயந்தி விடுமுறை

14.07.2022- ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை

16.07.2022 – ஹரேலா டேராடூனில் வங்கி விடுமுறை

17.07.2022 – ஞாயிறு விடுமுறை

23.07.2022 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை

24.07.2022 – ஞாயிறு விடுமுறை .

26.07.2022- கேர் பூஜை விடுமுறை .

31.07.2022 – ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!