SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMல் பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - OTP மூலம் ATMல் பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - OTP மூலம் ATMல் பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMல் பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு OTP மூலம் ATMல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. இந்த சேவையை எப்படி பெற்றுக்கொள்வது என்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ATM சேவை

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து காப்பாற்றும் வகையில் OTP மூலம் ATMல் பணம் எடுக்கும் வசதியை ஜனவரி 1, 2020 முதல் செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக எங்களின் OTP-அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறையானது மோசடி தடுப்பு நடவடிக்கையாகும். உங்களை மோசடியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதே எங்களின் முதல் நோக்கம்’ என்று எஸ்பிஐ வங்கி இந்த சேவை குறித்த விவரங்களை ட்வீட் செய்துள்ளது.

தமிழகத்தில் கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவியருக்கான முக்கிய அறிவிப்பு – ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு!

இப்போது SBI வங்கி, ஏடிஎம்களில் மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, ஏடிஎம்களில் இருந்து ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் நபரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை (OPT) அனுப்புகிறது. அதன் படி, பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வங்கியின் OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையைப் பயன்படுத்தலாம். இப்போது எஸ்பிஐயின் OTP அடிப்படையிலான பணம் திரும்பப் பெறும் வசதி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP தேவை.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை கடவுச்சொல் (OTP) என்பது ஒரு ஒற்றை பரிவர்த்தனைக்கான பயனரின் அடையாளத்தை சரிபார்க்கும் நான்கு இலக்க எண்ணாகும்.
  • இப்போது ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்ட பிறகு OTP எண்ணுக்கான திரை தோன்றும்.
  • இப்போது பணத்தைப் பெற, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPயை உள்ளிட வேண்டும்.

Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதி மோசடிகளை குறைப்பதற்காக UPI நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லா பரிவர்த்தனைகளை முன்மொழிந்தார். தற்போது வரை, ஏடிஎம்கள் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் UPI ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ATM நெட்வொர்க்குகளுக்கும் இந்த வசதியை நீட்டிக்க RBI முன்மொழிகிறது. அத்தகைய பரிவர்த்தனைகளில் உண்மையான அட்டைக்கான தேவையை நீக்குவது, கார்டு ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் மற்றும் பிற மோசடி வடிவங்களில் மோசடிகளை தவிர்க்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!