SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவைகள் முடக்கம்! இதற்காக தான்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேவைகள் முடக்கம்! இதற்காக தான்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேவைகள் முடக்கம்! இதற்காக தான்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவைகள் முடக்கம்! இதற்காக தான்!

SBI வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புது புது வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் புதிதாக வாட்ஸ் அப் மூலம் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அதன் வங்கி சேவைகளை எளிதாக பெற, சமீபத்தில் சில டோல் பரீ எண்களை அறிவித்தது. இதன் மூலம் எஸ்பிஐ-யில் சில நிதி சேவைகளை மிக எளிதில் பெறலாம். அதனை டோல் ப்ரீ எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை வங்கி வேலை நாட்களில் மட்டும் அல்ல, வங்கி வேலை நேரத்தில் மட்டும் அல்ல, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து தற்போது வாட்ஸ்அப் பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை பெறுவதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மினி நிதிநிலை அறிக்கை பெறுதல் என பல்வேறு வசதிகளை பெற முடியும். இந்த சேவையை பெற பதிவு செய்தல் அவசியமாகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வாடிக்கையாளர் (AC NO XXXX) கணக்கு எண்ணையும் டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு

வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்தவுடன் எஸ்பிஐ வங்கி எண்ணான 90226 90226 இதில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும். மேலும் 90226 90226 இந்த எண்ணிற்கு ‘Hi SBI’ என குறுஞ்செய்தி அனுப்புங்கள்.வாட்ஸ்அப் பேங்கிங் வசதிக்கு உங்களது எண் பதிவு செய்யப்பட்டு விட்டால், ‘Dear Customer,Welcome to SBI Whatsapp Banking Services! என ஆங்கில குறுஞ்செய்தி வரும். அதன்பின்னர், இருப்பு நிலை அறிதல், மினி நிதிநிலை அறிக்கை அறிதல், வாட்ஸ்அப் சேவை பதிவை துண்டித்தல் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வாட்ஸ்அப் சேவையை வழங்குகிறது.

இந்தச் சேவை மூலம், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் கார்டு குறித்த தகவல்கள், மதிப்புக்கூட்டு புள்ளிகள், கட்டவேண்டிய தொகை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் இன்று ( 5 ஆகஸ்ட் 2022) 01.15 மணி முதல் 5 ஆகஸ்ட் 2022 03.45 மணி வரை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணி காரணமாக INB / YONO / YONO லைட் / yono வணிகம் / UPI ஆகிய சேவைகள் கிடைக்காது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!