PPF, NSC & சுகன்யா சம்ரித்தி சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்வு?

0
PPF, NSC & சுகன்யா சம்ரித்தி சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்வு?
PPF, NSC & சுகன்யா சம்ரித்தி சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்வு?PPF, NSC & சுகன்யா சம்ரித்தி சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்வு?
PPF, NSC & சுகன்யா சம்ரித்தி சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்வு?

கடந்த பல மாதங்களாக வட்டி விகிதங்களில் உயர்வை பெறாமல் இருந்து வரும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் ஜூன் மாத இறுதிக்குள் PPF, NSC அல்லது SSY திட்ட வட்டி விகிதங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட்டி விகிதங்கள்

இன்றைய கால கட்டத்தில் வங்கிகளை போல அஞ்சலக சேமிப்புத் திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குவதால் பலர் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் நிலையான வருமானம் கிடைக்கும். மேலும் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், அவை மிகவும் நம்பகமானவையாக இருக்கிறது. அந்த வகையில் அஞ்சல்துறை, வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய சேவைகளை அளிக்கிறது.

Exams Daily Mobile App Download

இவை ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான விகிதத்தை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றில் பணத்தை முதலீடு செய்தவர்கள் வரும் ஜூன் 30 அன்று புதிய வட்டி விகிதங்களை பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது PPF, NSC அல்லது SSY ஆகியவற்றின் வட்டி விகிதங்களை மாற்ற அரசாங்கம் பரிசீலிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இதற்கிடையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்து இந்த மாத இறுதி வரை அதாவது ஜூன் 30 வரை செல்லுபடியாகும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களை விரிவாக பார்க்கலாம்.

  • பொது வருங்கால வைப்பு நிதி – 7.1 சதவீதம்
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8 சதவீதம்
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா – 7.6 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா – 6.9 சதவீதம்
  • சேமிப்பு வைப்பு – 4 சதவீதம்

  • 1 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 2 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 3 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 5 ஆண்டு கால வைப்பு – 6.7 சதவீதம்
  • 5 ஆண்டு தொடர் வைப்பு – 5.8 சதவீதம்
  • 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – 7.4 சதவீதம்
  • 5 ஆண்டு மாத வருமானக் கணக்கு – 6.6 சதவீதம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!