LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – டெலிவரிக்கு பணம் கொடுக்கணுமா? உண்மையான விதிமுறை இதுதான்!

0

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – டெலிவரிக்கு பணம் கொடுக்கணுமா? உண்மையான விதிமுறை இதுதான்!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், கடந்த மே மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தின. இதனால் நடுத்தர குடும்பங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு அதிக கட்டணத்தை, டெலிவரி ஊழியர்கள் வசூலித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது.

டெலிவரிக்கு பணம் கொடுக்கலாமா:

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் மே மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தியது அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, சிலிண்டர் ரூ.1015 ஆக விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொதிப்படைந்து உள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

விஜய் டிவி விஜே சித்ரா மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் – ரசிகர்கள் அதிர்ச்சி! ஹேமநாத் தகவல்!

சிலிண்டர் டெலிவரி பண்ண வரும் ஊழியர்கள் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை சராசரியாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த கூடுதல் கட்டணம் ஒவ்வொரு ஏரியாவில் வேற வேற கட்டணமாக உள்ளது என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் இதில் உண்மையான சிஸ்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக டெலிவரி ஊழியர் ஒருவரிடமே நேரடியாக பேசினோம். அதற்கு அந்த ஊழியர் சிலிண்டர் டெலிவரிக்கு தனி கட்டணம் என்பது கிடையாது. நாம் செலுத்தும் சிலிண்டர் கட்டணத்திலேயே டெலிவரி கட்டணமும் உள்ளடங்குகிறது. எனவே கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என கூறினார். நாம் டெலிவரி ஊழியருக்கு கொடுக்கும் கூடுதல் கட்டணம் நாமாக விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் மட்டும் தான் எனவும், முறைப்படி டெலிவரிக்கு கட்டணம் கிடையாது என அந்த டெலிவரி ஊழியர் விளக்கம் அளித்தார்.

இருப்பினும் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே டெலிவரிக்கு கட்டணம் கிடையாது. 5 கிலோமீட்டருக்கு மேல் டெலிவரிக்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால், 5 கிலோமீட்டருக்குள் சிலிண்டரை டெலிவரி செய்யும் ஊழியரும், கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்பதை மக்களின் புகார் ஆகும். மேலும் டெலிவரியே இல்லாமல் நாமாக சென்று சிலிண்டரை பெற்றுக்கொண்டால் கட்டணத்தை குறைக்கலாம். அதாவது, தற்போது ஒரு சிலிண்டர் 965.50 ரூபாய். இந்த சிலிண்டர் டெலிவரி செய்யப்படாமல் நாமே சென்று எடுத்துக்கொண்டால் சுமார் 17 ரூபாய் குறைக்கப்பட்டு 948.5 ரூபாய் மட்டும் செலுத்தலாம். ஆனால், இதை பல ஏஜென்சிகள் வழங்குவதில்லை, என அந்த டெலிவரி ஊழியர் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!